எனக்கு அரசியலைப்பற்றி எதுவும் தெரியாது, அந்த கண்ணோட்டமும் இல்லை
என்று நடிகை திரிஷா கூறியுள்ளார்.
விலங்குகளின் மீது பாசமும் நேசமும் கொண்ட திரிஷா தெரு நாய்களை மொத்தமாக
பட்டியில் அடைக்கவேண்டாம் என்று மேயருக்கு கடிதம் எழுதியிருக்கிறார்.
12 வருட சினிமா வாழ்க்கை, எதிர்கால திட்டம், பாலிவுட் கனவு பற்றியும் பிரபல
வார இதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
முக்கியத்துவம் இருக்கணும்
12 வருடத்தில் நிறைய கமர்ஷியல் படங்களில் நடித்துவிட்டேன். இனிமேல் எனக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்கப் போகிறேன்.
ஆக்ஷன் படம்
இப்ப இரண்டு ஆக்ஷன் படங்களில் நடிக்கிறேன். இரண்டுமே உமன்ஸ் ஓரியண்டட் படம். அதில் போல்டான பெண்ணாக நடிக்கிறேன்.
அது எனக்கு சரிப்படலை
பாலிவுட் பட உலகம் வேற மாதிரியானது. அது எனக்கு சரிப்பட்டு வரலை. எனக்கு சென்னையை விட்டு போக விருப்பமில்லை.
சமூக அக்கறை உண்டு
ஸ்கூல் படிக்கிறப்ப இருந்தே எனக்கு சமூகத்தின் மீது அக்கறை உண்டு.
அதனால்தான் எனக்கு தெரிந்ததை செய்கிறேன். மிருகங்களின் மீதும் அக்கறையோடு
இருக்கிறேன்.
அரசியல் தெரியாது
பெண்கள் ஜொலிக்கிற காலம் இது. என்னை யாராலும் அடக்கி ஆளமுடியாது. ஆம்பிஷன்
இருந்தால் யாராலும் முன்னுக்கு வர முடியும். அரசியலைப் பொருத்தவரை எனக்கு
எதுவுமே தெரியாது. அந்த கண்ணோட்டம் இல்லை. ஆனாலும் எதிர்காலத்தைப் பற்றி
இப்போ எதுவும் சொல்ல முடியாது.
Comments