உதட்டை பெரிதாக்க சர்ஜரி செய்த ஸ்ருதி ஹாஸன்

உதட்டை பெரிதாக்க சர்ஜரி செய்த ஸ்ருதி ஹாஸன்மும்பை: கமல் ஹாஸனின் மூத்த மகள் ஸ்ருதி உதடுகளை பெரிதாக்க அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளார். ஸ்ருதி ஹாஸன் தற்போது பாலிவுட், டோலிவுட்டில் கவனம் செலுத்தி வருகிறார். பாலிவுட் நடிகைகளில் கத்ரினா கைப், அனுஷ்கா சர்மா ஆகியோர் தங்கள் உதடுகளை பெரிதாக்க அறுவை சிகிச்சை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால் அவர்கள் அதை ரகசியமாக வைத்துள்ளனர். (அவர்கள் நினைக்கிறார்கள் யாருக்கும் தெரியாது என்று). இந்நிலையில் ஸ்ருதியோ தனது உதடுகளை பெரிதாக்க சிகிச்சை செய்து கொண்டதை தில்லாக ஒப்புக் கொண்டுள்ளார். அண்மையில் அனுஷ்கா சர்மாவிடம் ஒரு நிருபர் உதட்டு சிகிச்சை குறித்து கேள்வி கேட்டதற்கு, அம்மணி பொரிந்து தள்ளிவிட்டார். ஸ்ருதி தைரியமான பொண்ணு தான்.

Comments