தி.மு.க., "மாஜி' அமைச்சர்கள், சொத்து குவிப்பு வழக்கில் விடுவிக்கப்பட்டதை
எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில், "அப்பீல்' செய்ய, லஞ்ச ஒழிப்புத் துறை
மும்முரமாக உள்ளது. அரசின் ஒப்புதலுக்காக, லஞ்ச ஒழிப்புத் துறை
காத்திருக்கிறது.
கடந்த, 1996 2001ல், தி.மு.க., ஆட்சியின் போது, அமைச்சர்களாக கோ.சி.மணி, துரைமுருகன், வீரபாண்டி ஆறுமுகம், பொன்முடி, நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் பதவி வகித்தனர். 2001ல்,
அ.தி.மு.க.,
ஆட்சி வந்ததும், இவர்களுக்கு எதிராக, சொத்து குவிப்பு வழக்கு
தொடரப்பட்டது.அந்தந்த மாஜிஸ்திரேட் கோர்ட்களில், குற்றப்பத்திரிகை தாக்கல்
செய்யப்பட்டது. வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி, மாஜிஸ்திரேட்
கோர்ட்களில், "மாஜி'க்கள் மனுக்கள் தாக்கல் செய்தனர்.வழக்கில் இருந்து,
விடுவிக்கப்பட்டனர். முன்னாள் அமைச்சர் கோ.சி.மணி மட்டும், வழக்கை
சந்தித்து விடுதலை பெற்றார். கடந்த, தி.மு.க., ஆட்சியின் போது, இது
நடந்தது.வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டதை எதிர்த்து, அரசு தரப்பில்,
"அப்பீல்' செய்யப்படவில்லை. "அப்பீல்' செய்வது என, லஞ்ச ஒழிப்புத் துறை
முடிவெடுத்தும், அப்போது, தி.மு.க., ஆட்சியில் இருந்ததால், "அப்பீல்'
செய்ய, தகுதியான வழக்கு இல்லை என, கைவிட்டது.கடந்த, 1996 2001ல், தி.மு.க., ஆட்சியின் போது, அமைச்சர்களாக கோ.சி.மணி, துரைமுருகன், வீரபாண்டி ஆறுமுகம், பொன்முடி, நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் பதவி வகித்தனர். 2001ல்,
அடுத்து, 2011ல், அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், பழைய அமைச்சர்கள் மீதான வழக்குகள், தூசு தட்டப்பட்டு, உயிர் கொடுக்கப்பட்டது. அப்பீல் செய்வதற்கு ஏற்பட்ட கால தாமதத்தை ஏற்கக் கோரி அப்பீல் செய்தது.துரைமுருகன், வீரபாண்டி ஆறுமுகம், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்துக்கு எதிராக, சென்னை ஐகோர்ட்டிலும், கோ.சி.மணி விடுதலை, நேரு, ஐ.பெரியசாமி, ரகுபதி, முன்னாள் மேயர் குழந்தைவேலு விடுவிக்கப்பட்டதை எதிர்த்து, மதுரை ஐகோர்ட் கிளையிலும், லஞ்ச ஒழிப்புத் துறை, மனுக்கள் தாக்கல் செய்தது.இதில், "அப்பீல் செய்வதற்கு ஏற்பட்ட, கால தாமதத்தை ஏற்பதற்கு, போதிய காரணம் உள்ளது' என, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது. இந்த உத்தரவு, லஞ்ச ஒழிப்புத் துறைக்கு சாதகமாக அமைந்தது. ஆனால், மதுரை ஐகோர்ட் கிளை, லஞ்ச ஒழிப்புத் துறையின் மனுக்களை, தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
சென்னை ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து, துரைமுருகன் தாக்கல் செய்த, அப்பீல் மனுவை, சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்து விட்டது. எனவே, மதுரை ஐகோர்ட் கிளையின் உத்தரவை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் மனு தாக்கல் செய்தால், தங்களுக்கு சாதகமான உத்தரவு வருவதற்கு வாய்ப்பு இருப்பதாக, லஞ்ச ஒழிப்புத் துறை கருதியது.இதற்காக, சட்ட ஆலோசனைகள் பெறப்பட்டு, துரைமுருகன் வழக்கில், சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவு என, அனைத்து ஆவணங்களையும், அரசுக்கு அனுப்பி வைத்துள்ளது. அரசின் அனுமதியை எதிர்பார்த்து, லஞ்ச ஒழிப்புத் துறை காத்திருக்கிறது. அரசின் ஒப்புதல் கிடைக்கும் பட்சத்தில், அப்பீல் செய்வதற்கான நடவடிக்கைகள் விரைவு பெறும்.
சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை:முன்னாள் அமைச்சர்கள் பொன்முடி, சுரேஷ்ராஜன், சொத்து குவிப்பு வழக்கில் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து, லஞ்ச ஒழிப்புத் துறை தாக்கல் செய்த, "அப்பீல்' மனுக்கள் மீதான விசாரணை, செப்., 10ம் தேதி, சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது.சொத்து குவிப்பு வழக்கில், முன்னாள் அமைச்சர் பொன்முடி விடுவிக்கப்பட்டதை எதிர்த்து, ஐகோர்ட்டில், லஞ்ச ஒழிப்புத் துறை, அப்பீல் செய்தது. இந்த மனு, தள்ளுபடி செய்யப்பட்டது. ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில், "அப்பீல்' செய்யப்பட்டுள்ளது. அதேபோல், முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜனை, சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்க, நாகர்கோவில் கோர்ட் மறுத்து விட்டது. இதை எதிர்த்து, மதுரை ஐகோர்ட் கிளையில், சுரேஷ்ராஜன் மனு தாக்கல் செய்தார். அவரை, வழக்கில் இருந்து விடுவித்து, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. அந்த உத்தரவை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில், லஞ்ச ஒழிப்புத் துறை "அப்பீல்' செய்துள்ளது.
Comments