தமிழுக்கு மீண்டும் வருகிறார் சுவாதி

தமிழில், சசிகுமார் இயக்கி நடித்த, "சுப்ரமணியபுரம் படத்தில் நடித்தவர் சுவாதி. தெலுங்கு நடிகையான இவர், அங்கு, பல,"டிவி தொடர்களிலும் நடித்துள்ளார். அதன் பின், "போராளியில் நடித்தார். ஆனாலும், கோடம்பாக்கம், சுவாதியை கண்டு கொள்ளவில்லை. தமிழ் சினிமா கை கொடுக்காததால், மலையாளப் பக்கமாக ஒதுங்கிய சுவாதிக்கு, அதிக வாய்ப்புகள் கிடைத்தன
. முன்னணி நடிகர்களின் ஜோடியாக சில படங்களில் நடித்து வருகிறார்.


"இனி, தமிழில் நமக்கு வாய்ப்பு கிடைக்காது என, நினைத்து கொண்டிருந்த நேரத்தில், திடீரென அவருக்கு கோடம்பாக்கத்திலிருந்து அழைப்பு வந்தது. தற்போது, விஜயசேதுபதி நடிக்கும், "இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா மற்றும் ஜெய் நடிக்கும், "வடகறி ஆகிய படங்களில், அம்மணிக்கு முக்கியமான கேரக்டராம்.ஜெய்க்கு ஜோடியாக ஏற்கனவே, "சுப்ரமணியபுரம் படத்தில் நடித்த சுவாதிக்கு, "வடகறி படத்திலும்,  அவரை காதலிக்கும் ரொமான்டிக் வேடம் தான். அதனால், இதற்கு முன், தமிழில் நடித்த படங்களை விட, கிளு கிளுப்பான நடிப்பை வெளிப்படுத்தப் போவதாக கூறியுள்ள சுவாதி, பாடல் காட்சிகளில், மாடர்ன் உடைகளில், கவர்ச்சி தரிசனமும் கொடுக்கிறார்.

Comments