தீபாவளிக்கு மோதும் அஜீத், கமல் படங்கள்?

தீபாவளிக்கு மோதும் அஜீத், கமல் படங்கள்?சென்னை: வரும் தீபாவளிக்கு அஜீத்தின் ஆரம்பமும், கமலின் விஸ்வரூபம் 2 படமும் ரிலீஸாகும் என்று கூறப்படுகிறது. இந்த படத்திற்கு எப்படா தலைப்பு வைப்பார்கள் என்று ரசிகர்கள் பல மாதம் காத்திருந்த படம் அஜீத், நயன்தாரா, ஆர்யா, டாப்ஸி நடித்துள்ள ஆரம்பம். படத்தில் அஜீத் ஹேக்கராக வருகிறார் என்று முதலில் கூறப்பட்டது. ஆனால் ஆர்யா தான் ஹேக்கராம். இந்த படத்தில் அஜீத் சண்டை காட்சிகளில் டூப் போடாமல் நடித்து காயம் அடைந்தார்.

ஆரம்பம் படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார்களாம். இந்நிலையில் கமல் ஹாஸனின் விஸ்வரூபம் 2 படத்தையும் தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார்களாம். அப்படி என்றால் தீபாவளிக்கு அஜீத், கமல் படங்கள் மோதும் என்று எதிர்பார்க்கலாம். விஸ்வரூபம் படத்தை போன்று பிரச்சனை இல்லாமல் இருந்தால் இரண்டாம் பாகம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும். இல்லை என்றால் விஸ்வரூபம் படம் போல் பெரும் பஞ்சாயத்திற்கு பிறகு தான் ரிலீஸ் ஆகும்.

Comments