மும்பை:பாகிஸ்தான் பயங்கரவாதிகள், இலங்கை மற்றும் கடலோர மாநிலங்கள் வழியாக,
தென் மாநிலங்களில் நுழைந்து, தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக,
மகாரஷ்டிர மாநில உளவுத் துறை எச்சரித்துள்ளது.
இது குறித்து, தென் மாநிலப் பகுதிகளுக்கான எச்சரிக்கையாக, மகாராஷ்டிர மாநில உளவுத் துறை கூறியிருப்பதாவது:பாகிஸ்தானின், லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாத அமைப்பு, பஞ்சாபியர்கள் மற்றும் முஸ்லிம்கள் என, பலருக்கும் பயங்கரவாத தாக்குதல் பயிற்சி
அளித்து வருகிறது. தென் மாநிலங்களில் தாக்குதல் நடத்துவதற்காக
தயார் செய்யப்பட்டுள்ள இவர்கள், இலங்கையின் யாழ்ப்பாணம் பகுதியில் இருந்து,
தமிழகத்தில் நுழைந்து, மதுரை, மயிலாடுதுறையில் பயங்கர தாக்குதலை நடத்த
திட்டமிட்டுள்ளனர்.இன்னும் சில மாதங்களில், தாக்குதல் நடத்தப்படலாம். கடந்த
பிப்ரவரி மாதம், 2ம் தேதி, மூன்று பாகிஸ்தான் இளைஞர்களை, இலங்கை
பாதுகாப்பு அதிகாரிகள் கைது செய்து விசாரித்தபோது, இந்த தகவல் தெரிய
வந்துள்ளது.சிங்கள மீனவர்கள் போல், கேரளா மற்றும் தமிழகத்திற்குள்,
பயங்கரவாதிகள் நுழையக்கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.இது குறித்து, தென் மாநிலப் பகுதிகளுக்கான எச்சரிக்கையாக, மகாராஷ்டிர மாநில உளவுத் துறை கூறியிருப்பதாவது:பாகிஸ்தானின், லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாத அமைப்பு, பஞ்சாபியர்கள் மற்றும் முஸ்லிம்கள் என, பலருக்கும் பயங்கரவாத தாக்குதல் பயிற்சி
இதற்கான முயற்சியில், லஷ்கர் - இ - தொய்பா, பப்பர் கால்சா இன்டர்நேனல், ஜெய்ஷ் -இ - முகமது, ஜமாத் - உத் - தாவா, லஷ்கர் - இ - ஜாங்வி, அல் - உமர் முஜாகிதீன், ஹிஜ் - உல் - முஜாகிதீன் போன்ற பயங்கரவாத அமைப்புகள் ஈடுபட்டுள்ளன.தென் மாநிலங்களை தாக்க திட்டமிட்டுள்ள அந்த அமைப்புகள், இதற்காக இலங்கையில் இருந்து புறப்பட திட்டமிட்டுள்ளன.இவ்வாறு, அந்த எச்சரிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Comments