சென்னை:தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில், பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த
திட்டமிட்டிருப்பதாக, மத்திய உளவுத்துறை, மீண்டும் எச்சரித்துள்ளதைத்
தொடர்ந்து, கடலோர பகுதிகள் அனைத்தும், உஷார் படுத்தப்பட்டுள்ளன.
மும்பையில், கடல் மார்க்கமாக வந்து, பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, ஒவ்வொரு முறை, உளவுத்துறை எச்சரிக்கும் போதும், தேவையான கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இந்நிலையில்,
சமீபத்தில், இலங்கை வழியாக, பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தமிழகத்திற்குள்
ஊடுருவி, மதுரை, மயிலாடுதுறை உள்ளிட்ட பகுதிகளில் தாக்குதல் நடத்த
திட்டமிட்டு வருவதாக, மத்திய உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது.மும்பையில், கடல் மார்க்கமாக வந்து, பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, ஒவ்வொரு முறை, உளவுத்துறை எச்சரிக்கும் போதும், தேவையான கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இந்நிலையில்,
இந்நிலையில், இலங்கையில் இரண்டு பாகிஸ்தானியர் பிடிபட, நிலைமை டென்ஷனானது. அப்போதிருந்தே, தமிழகத்தின் எல்லைப் பகுதிகள், கடலோரப் பகுதிகளில் கண்காணிப்பு தீவிரமாகின. இந்நிலையில், மீண்டும், மத்திய உளவுத்துறை, தமிழகத்தில், கடல் வழியாக பயங்கரவாதிகள், 30க்கும் மேற்பட்டவர்கள் ஊடுருவ திட்டமிட்டிருப்பதாக, எச்சரித்தது.மேலும் சென்னை, நாகை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, கன்னியாகுமரி உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில், அவர்கள், மீனவர்கள் போர்வையில் ஊடுருவி, மிகப்பெரிய தாக்குதலை நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்பட்டது.
ரோந்து தீவிரம்:
இதையடுத்து,
தமிழக கடலோரப் பகுதிகளில், கடற்படை, கடலோர காவல் படை மற்றும் கடலோர காவல்
குழுமத்தினர், ரோந்துப் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர். கடலோர காவல்
படைக்கு சொந்தமான, 100 காவல் நிலையங்கள் உஷார் படுத்தப்பட்டுள்ளன. கடலோர
சோதனைச் சாவடிகளில், கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டு, வாகனங்கள் கடும்
சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டு வருகின்றன.மீனவர்கள் கடலுக்கு
செல்லும்போது, சந்தேகப்படும்படியான படகுகள் தென்பட்டாலோ, சந்தேகப்படும்
நபர்கள் குறித்து அறிந்தாலோ, தகவல் தெரிவிக்கும்படி எச்சரிக்கப்பட்டு
உள்ளனர்.இதுதவிர, தமிழகத்தின் எல்லையோர மாவட்டங்களில் உள்ள சோதனைச்
சாவடிகள், எல்லையோர வனப்பகுதிகளும் உஷார் படுத்தப்பட்டுள்ளன.
Comments