
அணிவகுப்பு மரியாதை:
சென்னை,
புனித ஜார்ஜ் கோட்டையில், முதல்வர் ஜெயலலிதா, தேசியக் கொடியேற்றி, போலீஸ்
அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
பின் அவர் பேசியதாவது: கல்லூரி
அதிகம் இல்லாத பகுதிகளில் உள்ள மாணவர்கள், உயர்கல்வி பெற, இந்த ஆண்டு, 12
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், இரண்டு பல்கலைக்கழக உறுப்பு
கல்லூரிகள், மூன்று அரசு பொறியியல் கல்லூரிகள், 11 பல வகை தொழில்நுட்பக்
கல்லூரிகள், தேசிய சட்டப்பள்ளி, இந்திய தகவல் தொழில்நுட்ப கல்வி நிறுவனம்,
ஆகியவை துவக்கப்படும். தொழில் வளர்ச்சியை பெருக்க, 17 நிறுவனங்களுடன்,
ஒப்பந்தம் போடப்பட்டு, அந்த நிறுவனங்கள், இங்கு தொழில் துவங்க, நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையால்,
அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது.
1 கிலோ அரிசி ரூ.20:
பொது
வினியோகத் திட்டத்தின் கீழ், ஒரு மாதத்திற்கு, 20 கிலோ விலையில்லா அரிசி,
மானிய விலையில், பாமாயில், துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு, சர்க்கரை
போன்றவை வழங்கப்படுகின்றன. கூட்டுறவு நிறுவனங்கள் மற்றும் சிறப்பு
அங்காடிகள் மூலம், ஒரு கிலோ அரிசி, 20 ரூபாய்க்கு, வெளிச்சந்தையில்
விற்கப்படுகிறது. பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள், "அம்மா உணவகம்' என,
விலைவாசி குறைப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன. தேசிய உணவு
பாதுகாப்புச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால், தமிழகத்தில், தற்போது
குடும்ப அட்டைகள் மூலம் வழங்கப்படும் அரிசியில், 1 லட்சம் டன் அரிசி
அளவுக்கு பற்றாக்குறை ஏற்படும். இதில், உரிய திருத்தங்கள் மேற்கொள்ளும்படி,
மத்திய அரசை கேட்டுக் கொண்டுள்ளேன். தமிழகத்தை பொறுத்தவரை, அனைவருக்குமான
பொது வினியோகத் திட்டம், தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படும். கச்சத்தீவில்,
நமக்குள்ள உரிமையை நாம் நிலைநாட்டுவோம், என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
சுதந்திரப்
போராட்ட வீரர்களை கவுரவப்படுத்தும் வகையில், தற்போது அவர்களுக்கு
வழங்கப்படும், 7,000 ரூபாய் ஓய்வூதியம், இம்மாதம், 1ம் தேதியிலிருந்து,
9,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். சுதந்திரப் போராட்ட வீரர்களின்,
வாரிசுதாரர்களுக்கு வழங்கப்படும், குடும்ப ஓய்வூதியம், 3,500
ரூபாயிலிருந்து, 4,500 ரூபாயாக உயர்த்தப்படும். இவ்வாறு, முதல்வர் ஜெயலலிதா
பேசினார்.
Comments