ஆகவே பசியைத் தீர்க்கவும்,
அதே சமயம் உடல் எடையை அதிகரிக்கச் செய்யாமல் இருக்கவும், மும்பையிலுள்ள
ஹெல்தி லிவ்விங் டயட் கிளினிக்கின் (Healthy Living Diet Clinic) மூத்த
பதிவு பெற்ற உணவு வல்லுனர் மற்றும் நீரிழிவு நோய் குறித்த அறிவுரையாளர்
திருமதி. அனிதா பத்தானியா அவர்கள் பரிந்துரைத்த ஆரோக்கியமான ஸ்நாக்ஸ்களைத்
தொகுத்து, உங்களுக்காகக் கீழே வழங்கியுள்ளோம்.
அந்த ஸ்நாக்ஸ்களை மாலை
வேளையில் சாப்பிட்டால், நிச்சயம் உடல் எடை அதிகரிப்பதை தவிர்ப்பதோடு,
பசியும் நீங்கி, உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.
பாதாம் பருப்பு
பாதாம் பருப்பானது மாலை நேர பசியைத் தீர்ப்பதற்கான சிறந்த
சிற்றுண்டியாகும். எனவே மாலையில் 13-14 பருப்புகளை சாப்பிடலாம். இதில் 98
கலோரிகளே உள்ளன. எனவே இது மிகச் சரியான மாலை நேர ஸ்நாக்ஸாக இருக்கும்.
ஆப்பிள்
தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால், மருத்துவரிடம் செல்ல வேண்டிய அவசியமே
இல்லை என்பார்கள். ஒரு ஆப்பிளில் 100 கலோரிகளே உள்ளது. எனவே பசி எடுக்கும்
போது ஒரு ஆப்பிளை நன்கு மென்று சாப்பிடும் போது, அதிலுள்ள நார்ச்சத்து
உடலிலுள்ள அதிகப்படியான கொழுப்புச் சத்தினைக் குறைக்கவும், சுற்றுப்புற
மாசுக்களால் ஏற்படும் துன்பங்களிலிருந்து காக்கவும் செய்கிறது.
வேர்க்கடலை
வேர்க்கடலையானது ஆரோக்கியமான ஒரு சிற்றுண்டி. எனவே ஒரு கைப்பிடி அளவு
வேர்க்கடலைகளை சாப்பிடும் பொழுது, அது 74 கலோரிகளே தருகிறது. மேலும், இது
குறைந்த அளவு கிளைசீமிக் இன்டெக்ஸ் இருப்பதால், அது ஆற்றலை மெதுவாக
வெளிப்படுத்தி வெகு நேரத்திற்கு வயிறு நிறைந்தது போல உணர வைக்கும்.
திராட்சை
மெலான் வகைப் பழங்கள்
மெலான் வகைப் பழங்கள் மிகச்சிறந்த சிற்றுண்டிகளாகும். தர்பூசணி, முலாம்
பழம் போன்ற மெலான் வகைப் பழங்களில் 88 கலோரிகள் உள்ளன. இதில் நீர்ச்சத்து
அதிகமாக இருப்பதால், குறைந்த அளவு கலோரிகளையே கொண்டுள்ளது.
உணவை அதிகம் விரும்பாதவராக இருந்தால், எளிய முறையில் செய்யக்கூடிய தக்காளி
சூப்பை அருந்தலாம். ஒரு சிறிய கிண்ணம் அளவுள்ள தக்காளி சூப்பில் 74
கலோரிகளே உள்ளன.
செர்ரி
இந்த சிறிய செர்ரிப் பழங்களில் வைட்டமின்கள் நிறைந்து காணப்படுகின்றன.
மேலும் மிகக் குறைந்த அளவே கொழுப்புச் சத்தும் உள்ளது. அதுமட்டுமல்லாமல்,
இதில் வெறும் 100 கலோரிகளே உள்ளன.
பசி எடுக்கும் பொழுது, ஒரு முழு பேரிக்காயை சாப்பிட்டால், வயிறு நன்கு நிறைவதோடு, 100 கலோரிகளையே அது நமக்குத் தருகிறது.
ப்ளூபெர்ரி
ஒரு கப் ப்ளூபெர்ரிப் பழத்தில் 83 கலோரிகளே உள்ளன. இதில்
ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்து காணப்படுகின்றன. ஆகவே இவை முதுமையைத்
தடுப்பதோடு, இதயத்தையும் பாதுகாக்கிறது.
Comments