முதுகு வலி
கர்ப்பம் மற்றும் முதுகு வலிக்கு நிறைய சம்பந்தம் இருக்கும். ஆம்,
கர்ப்பத்தின் ஒவ்வொரு நிலையின் போதும், குழந்தை வளர்ச்சியடைவதால், வயிறானது
பெரிதாக பெரிதாக, அதனை தாங்கும் முதுகில் வலியானது அதிகரித்துக் கொண்டே
இருக்கும். இத்தகைய வலியை பிரசவம் முடியும் வரை சந்திக்கக்கூடும்.
தலை வலி
முதல் மூன்று மாதத்தில் அடிக்கடி தலை வலியானது ஏற்படும். அதிலும் மதிய
நேரத்தில் தான் அதிகம் ஏற்படும். ஏனெனில் மதிய வேளையில் கர்ப்பிணிகளின்
உடலில் சர்க்கரையின் அளவானது குறைவதால், தலைவலியானது ஏற்படுகிறது. எனவே
இதனை சரிசெய்ய அவ்வப்போது இனிப்புகளை சாப்பிட்டு, நன்கு ஓய்வு எடுக்க
வேண்டும்.
கால் வலி
கர்ப்பமாக இருக்கும் போது ஏற்படும் மிகவும் மோசமான வலி என்றால் அது கால்
வலி தான். இத்தகைய கால் வலியின் ஆரம்பத்தில் அடிக்கடி கால்களில்
பிடிப்புகள் ஏற்படும். பின் உடல் எடை அதிகரிக்க அதிகரிக்க கால்களில்
கடுமையான வலியை சந்திக்கக்கூடும்.
பாத வலி
கர்ப்பிணிகளுக்கு பாதங்கள் வீங்குவது என்பது பொதுவானது. ஏனெனில் கர்ப்பமாக
இருக்கும் போது நீரானது பாதங்களில் அதிகம் தங்குவதால், அவை பாதங்களில்
வீக்கத்தை ஏற்படுத்தும். மேலும் இக்காலத்தில் இரத்த ஓட்டமானது பாதி
உடலுக்கு மட்டும் தான் ஓடும். இதனால் அந்த வலியானது நடக்க முடியாமல்
செய்வதோடு, எப்போதும் ஓய்வு எடுக்கத் தூண்டும்.
அடிவயிற்று பிடிப்பு
கர்ப்பத்தின் முதல் மூன்று மாதத்தில் அடிவயிற்றில் பிடிப்புக்கள் ஏற்படும்.
ஏனெனில் இக்காலத்தில் கருப்பையானது விரிவடைவதால், அடிவயிற்றில்
பிடிப்புடன் கூடிய வலி ஏற்படும்.
இவையே கர்ப்பமாக இருக்கும் போது பெண்கள் அனுபவிக்கக்கூடிய வலிகள். நீங்கள்
வேறு ஏதாவது வலியை அனுபவித்திருந்தால், அதை எங்களுடன் பகிர்ந்து
கொள்ளுங்கள்.
Comments