அம்மா பிரதமர்.. ராமராஜன் முதல்வர்... எப்படியிருக்கு இந்த கற்பனை!!

அம்மா பிரதமர்.. ராமராஜன் முதல்வர்... எப்படியிருக்கு இந்த கற்பனை!!ராமராஜன்... எண்பதுகளின் கிராம நாயகன். ஒரு கோடி சம்பளம் வாங்கி அதிசயிக்க வைத்த ஹீரோ. வரிசையாக ஹிட் கொடுத்து தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்களின் நம்பிக்ககைக்குரியவராகத் திகழ்ந்த ராமராஜன், நீண்ட நாள் அதிமுக விசுவாசி. அவ்வப்போது இவரை கட்சியில் டம்மியாக்கிக் கொண்டிருந்தாலும், ஒரு முறை நடந்த தேர்தலில் திருச்செந்தூர் தொகுதியில் நிற்க வைத்து எம்பியாக்கினார் ஜெயலலிதா.

ஆனால் மிக குறுகிய காலமே எம்பியாக இருந்தார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் இவருக்கு எம்எல்ஏ சீட் கிடைக்கும் சொல்லப்பட்டு வந்தபோது, திடீரென விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். அதிலிருந்து தேறி வந்தவர் இப்போது மீண்டும் சினிமா, அரசியலில் தீவிரமாகியிருக்கிறார். சமீபத்தில் அவர் ஆனந்த விகடனுக்கு 'ஏடா கூட' அளித்த பேட்டியில் அவரிடம் "அம்மா ஒருவேளை பிரதமர் ஆகிட்டா, அப்போ உங்களை தமிழக முதல்வர் ஆக்கிட்டா என்ன பண்ணுவீங்க?,'' என்று கேட்டுள்ளனர்.

அதற்கு பதிலளித்த ராமராஜன், "ஏன், அவங்க பிரதமர் ஆகக் கூடாதா? ஒரு மாதிரி சந்தேகமாக் கேக்கிறீங்க? பிரதமராக, மக்கள் செல்வாக்குதான் வேணும். அது அம்மாவுக்கு நிறைய இருக்கு. ஏன், தேவகவுடா பிரதமர் ஆகலையா? அம்மா பிரதமரானா நம்ம எல்லா ருக்கும்தான் பெருமை. முதல்ல, அம்மாவைப் பிரதமர் ஆக்குவோம். மத்ததை அப்புறம் பார்த்துக்கலாம்!,'' என்று கூறியுள்ளார். அப்ப முதல்வர் பதவிதான்னு கன்பர்மே பண்ணிட்டீங்களா!!

Comments