முதலில் புலி, தற்போது நாய்க்குட்டியை தத்தெடுத்த டோணி

Dhoniடெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் டோணி தெருவில் இருந்து மீட்கப்பட்ட நாய்க்குட்டியை தத்தெடுத்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் கேட்பன் மகேந்திர சிங் டோணி கடந்த 2011ம் ஆண்டு மைசூர் விலங்கியல் பூங்காவில் இருந்து அகஸ்தியா என்ற 9 வயது புலியை தத்தெடுத்தார். இந்நிலையில் அவர் ஒரு நாய்க்குட்டியை தத்தெடுத்துள்ளார்.
இது குறித்து அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது, ராஞ்சியில் உள்ள ஹோப் மற்றும் விலங்குகள் டிரஸ்ட்டில் இருந்து ஒரு நாய்க்குட்டியை தத்தெடுத்துள்ளேன். அதற்கு லியா என்று பெயர் வைத்துள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.

Comments