ரூ.62-ஐ தொட்டது ரூபாயின் மதிப்பு

மும்பை : அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று(ஆகஸ்ட் 16ம் தேதி) ரூ.62 எனும் புதிய உச்ச நிலை சரிவை சந்தித்தது. வாரத்தின் நான்காம் நாளான இன்று 10காசுகள் உயர்வுடன் ரூ.61.33 தொடங்கிய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவை சந்தித்தது. காலை 10.30 மணியளவில் ரூ.62-க்கு சரிந்தது. இதற்கு முன் கடந்தவாரம் ரூ.61.80-ஆக சரிந்து இருந்ததே உச்சநிலை சரிவாக இருந்த நிலையில் இன்று புதிய வரலாற்று சரிவை சந்தித்து இருக்கிறது.


ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியால் இந்திய பங்குசந்தையும் கடும் சரிவை சந்தித்தது. மும்பை பங்குசந்தை 10.35 மணியளவில் 500 புள்ளிகளும், நிப்டி 5,600-க்கும் கீழும் சென்றது. முன்னதாக கடந்த புதன் அன்று ரூ.61.43-ஆக முடிந்து இருந்தது ரூபாயின் மதிப்பு.

Comments