லோக்சபாவுக்கு வராமல் சோனியா 52%, ராகுல் 57% ஆப்சென்ட்

புதுடில்லி : இதுவரை நடைபெற்ற லோக்சபா கூட்டங்களில் 50 சதவீதத்திற்கும் குறைவான கூட்டங்களிலேயே காங்கிரஸ் தலைவர்கள் சோனியாவும், துணைத் தலைவர் ராகுலும் பங்கேற்றுள்ளனர். மொத்தமுள்ள 545 லோக்சபா உறுப்பினர்களில் 92க்கும் அதிகமான உறுப்பினர்கள் பெரும்பாலான கூட்டங்களில் பங்கேற்காது தவிர்த்துள்ளனர்.
தலைவர்களின் வருகை பதிவு :


15வது லோக்சபாவின் மழைக்கால கூட்டத்தொடர் இன்று துவங்க உள்ளது. நடப்பு ஆட்சியின் கடைசி மழைக்கால கூட்டத்தொடர் இதுவாகும். இதற்கு முன் நடைபெற்ற 314 கூட்டங்களில் 135ல் மட்டுமே சோனியாவும் ராகுலும் பங்கேற்றுள்ளனர். இத்தகவல் லோக்சபா இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தில் லோக்சபா கூட்டங்களில் பங்கேற்ற உறுப்பினர்கள் குறித்த விபரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. உறுப்பினர்களில் வருகை பதிவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் தான் மிக குறைந்த அளவில் உள்ளார். இணையதள விபரத்தின் படி சோனியா 48 சதவீதம் வருகை பதிவும், ராகுல் 43 சதவீதமும், பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி 82 சதவீதமும், ராஜ்நாத் சிங் 80 சதவீதமும் பெற்றுள்ளனர். முக்கிய தலைவர்களை விட முதல்வரிசை உறுப்பினர்கள் அதிகளவிலான வருகை பதிவுகளை பெற்றுள்ளனர். ஐக்கிய ஜனதா தள கட்சித் தலைவர் சரத் யாதவ் 83 சதவீதம், சமாஜ்வாதி கட்சி தலைவர் முலாயம் சிங் 86 சதவீதம், ராஷ்டிரிய ஜனதா தள கட்சி தலைவர் லாலு பிரசாத் 79 சதவீதம், பாஷூதீப் ஆச்சாரியா 90 சதவீதம், தாரா சிங் 93 சதவீதம், தேவகவுடா 66 சதவீதம் வருகை பதிவை கொண்டுள்ளனர்.
குறைந்த தலைவர்கள் :

மத்திய கவுன்சில் அமைச்சர்கள் 49 பேரும், எதிர்க்கட்சி தலைவர்கள், துணை சபாநாயகர் ஆகியோர் பல்வேறு காரணங்களால் 12 பேரும், 29 லோக்சபா உறுப்பினர்கள் மட்டுமே அனைத்து லோக்சபா கூட்டங்களிலும் பங்கேற்றுள்ளனர். இவர்களில் காங்கிரஸ் தலைவர்கள் மட்டுமே குறைந்த வருகை பதிவுகளை கொண்டவர்கள் ஆவர். ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் மது கோடா, சிபு சோரன், காமன்வெல்த் ஊழல் சுரேஷ் கல்மாடி மற்றும் சிறையில் இருக்கும் ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் தலைவர்கள் ஜெகன் மோகன் ரெட்டி ஆகியோர் மிகவும் மோசமான வருகை பதிவுகளை கொண்டுள்ளதாக இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. உ.பி., முன்னாள் முதல்வர் கல்யாண சிங், ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் பாபுலால் மரந்தி, சமாஜ்வாதி உறுப்பினர் ஜெயப்பிரதா, கிரிக்கெட் வீரர் நவஜோத் சிங் சிந்து ஆகியோரும் மோசமான வருகை பதிவு கொண்டவர்கள் ஆவர்.
ராகுல் மிகவும் மோசம் :


மற்ற அரசியல் கட்சியின் இளம் தலைவர்களு‌டன் ஒப்பிடுகையில் ராகுலின் வருகை பதிவு மிகவும் மோசமாக உள்ளது. பா.ஜ., வருண் 65 சதவீத கூட்டங்களிலும், என்.சி.பி.,யின் சுப்ரியா சுலே 87 சதவீத கூட்டங்களிலும் பங்கேற்றுள்ளனர். 120 லோக்சபா எம்.பி.,க்கள் 90க்கும் அதிகமான கூட்டங்களில் பங்கேற்றுள்ளனர். 12 தலைவர்கள் மிகக் குறைந்த வருகை பதிவு கொண்டவர்களாக உள்ளனர். பஜன்லால், திக்விஜய் சிங், டிம்பிள் யாதவ், அகிலேஷ் யாதவ், அர்ஜூன் முண்டே, சதானந்த கவுடா உள்ளிட்ட தலைவர்கள் மிக குறைந்த அளவிலான கூட்டங்களிலேயே பங்கேற்றுள்ளனர்.

Comments