இது தொடர்பாக என்.எம்.ஜோஷி மார்க் போலீஸ் நிலையத்தில் புகார்
செய்யப்பட்டது. பாதிக்கப்பட்ட பெண் போட்டோகிராபர் ஜஸ்லோக் ஹாஸ்பிடல்
மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தப்பி ஓடிய பலாத்கார கும்பலை கைது செய்ய போலீசார் 12 தனிப்படைகளை அமைத்து
இருந்தனர். தப்பி ஓடியவர்களில் இருவரது பெயரையும் கூட பாதிக்கப்பட்ட பெண்
தெரிவித்திருந்தார். மேலும் சந்தேக நபர்கள் 5 பேரின் வரைபடமும்
வெளியிடப்பட்டிருந்தது.
விடிய விடிய மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் தற்போது 5
குற்றவாளிகளும் அடையாளம் காணப்பட்டனர்.
ஒருவன் கைது- எஞ்சியோர் அடையாளம் காணப்பட்டனர்.
இது தொடர்பாக மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய போலீஸ் கமிஷனர்
சத்யபால் சிங், பலாத்கார சம்பவத்தில் ஈடுபட்டவர்களில் ஒருவன் கைது
செய்யபப்பட்டுவிட்டான். எஞ்சியோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த வழக்கி
விரைவு நீதிமன்றத்தில் நடத்தப்படும். பலாத்கார சம்பவத்தில் ஈடுபட்ட
குற்றவாளிகளுக்கு குறைந்தது 20 ஆண்டுகால தண்டனை பெற்றுத் தர நடவடிக்கை
மேற்கொள்வோம்.
கைது செய்யப்பட்ட நபர் மற்றும் அடையாளம் காணப்பட்ட நபர் பற்றிய விவரங்களை
வெளியிட இயலாது என்றார்.
Comments