
நாகப்பட்டினத்தில் விடுதிகள் மற்றும் சில வீடுகளில் போலீசார்
சோதனை
நடத்தினர். இதில் 49 பேர் சிக்கினர். 15 பெண்கள், 5 சிறுவர்கள் அடங்குவர். வேளாங்கண்ணி அருகே பிடிபட்ட இவர்கள் அனைவரும் புத்தூர் திருமண மண்டபம் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு விசாரிக்கப்பட்டு வருகிறது.
இவர்கள் ஆஸ்திரேலியா செல்ல இருந்ததாக தெரிவித்துள்ளனர். கடந்த சில
வாரங்களுக்கு முன்னர் ஆஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்ற 106 இலங்கை தமிழர்கள்
நடுக்கடலில் தத்தளித்தனர். அவர்களை நாகை மீனவர்கள் மீட்டனர் என்பது
குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலியாவில் வாழ அங்கு நல்ல வசதி இருப்பதாக இவர்கள்
கருதுகின்றனர். இதனால் இது போல அடிக்கடி தப்பித்து செல்லும் நிகழ்வு
நடக்கிறது என்கின்றனர் போலீசார்.
Comments