தங்கம் விலை ரூ.23 ஆயிரத்தை தொட்டது : ஒரே நாளில் ஆயிரம் ரூபாய் உயர்வு

சென்னை : ரூபாயின் மதிப்பில் சரிவை தடுக்கும் பொருட்டு அதன் ஒரு பகுதியாக தங்கம் மீதான இறக்குமதி வரியை 10 சதவீதமாக மத்திய அரசு இரு தினங்களுக்கு முன்னர் உயர்த்தியது. அதனைத்த‌ொடர்ந்து தங்கம் விலை உயர்ந்து வந்த நிலையில் இன்று(ஆகஸ்ட் 19ம் தேதி, வெள்ளிக்கிழமை) ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,024 உயர்ந்து, ரூ.23 ஆயிரத்தை தாண்டியது. இதேப்போல் வெள்ளியின் விலையும் கிலோவுக்கு ரூ.4 ஆயிரம் வரை உயர்ந்துள்ளது.


சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில் காலைநேர நிலவரப்படி, 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,904-க்கும், சவரனுக்கு ரூ.1,024 உயர்ந்து ரூ.23,232-க்கும், 24காரட் 10கிராம் தங்கத்தின் விலை ரூ.1,365 உயர்ந்து ரூ.31,060-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளியின் விலையும் அதிரடியாக உயர்ந்துள்ளது. ஒரு கிராம் சில்லரை வெள்ளியின் விலை ரூ.4.40 காசுகள் உயர்ந்து, ரூ.55.00-க்கும், பார் வெள்ளி கிலோவுக்கு ரூ.4,085 உயர்ந்து ரூ.51,385-க்கும் விற்பனையாகிறது.

Comments