
புதுடில்லி:""கூடங்குளம் அணுமின் நிலையம் செயல்படத் துவங்கியது முதல்,
இன்று வரை, தமிழகத்திற்கு, 100 மெகா வாட் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது,''
என, மத்திய மின்து
லோக்சபாவில்
நேற்று அவர் கூறியதாவது:கூடங்குளம் அணுமின் நிலையத்தில், உற்பத்தியாகும்
மொத்த மின்சாரத்தையும், தமிழகத்திற்கு தர வேண்டும் என, மத்திய அரசுக்கு,
தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. அதேபோல், கேரள அரசும், 500 மெகா வாட்
மின்சார வேண்டும் என,
கோரியுள்ளது. இருப்பினும், விதிமுறைகளின்படியே,
மாநிலங்களுக்கு இடையே மின்சாரம் வினியோகிக்கப்படும்.கூடங்குளம் அணு மின்
நிலையத்தின், முதல் பிரிவு செயல்படத் துவங்கியது முதல், இன்று வரை,
தமிழகத்திற்கு, 100 மெகா வாட் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. அணு மின்
நிலையத்தின் இரண்டு பிரிவுகளும் செயல்பாட்டிற்கு வந்து, 2,000 மெகா வாட்
மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் போது, தமிழகத்திற்கு, 925 மெகா வாட்
மின்சாரம் தரப்படும்.இதற்கு அடுத்ததாக, கர்நாடகாவுக்கு, 442 மெகா வாட்,
கேரளாவுக்கு, 266 மெகா வாட், புதுச்சேரிக்கு, 67 மெகா வாட் தரப்படும்.
மீதமுள்ள, 300 மெகா வாட் மின்சாரம், இன்னும் ஒதுக்கப்படாத பங்காக
உள்ளது.இவ்வாறு, அமைச்சர் சிந்தியா கூறினார்.
றை இணை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்தார்.
Comments