
சென்னை: தர்மபுரி இளவரசன் மரணத்தில் உண்மை நிலையை அறிய
எஸ்.ஆர்.சிங்காரவேலு தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படுவதாக தமிழக
முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
தர்மபுரி இளவரசனின் உடல் ரயில் தண்டவாளம் அருகே கண்டெடுக்கப்பட்டது. அவர்
தலையில் அடிபட்டு இறந்திருக்கிறார் என்று பிரேத பரிசோதனை அறிக்கையில்
தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் அவர் மரணத்தில் மர்மம் இருப்பதாக
உறவினர்கள் புகார் கூறி வந்தனர்.
இந்நிலையில் தமிழக அரசு இன்று விசாரணை ஆணையம் அமைத்து உத்தரவிட்டுள்ளது.
தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று வெளியிட்ட அறிக்கையில், இளவரசன் மரணம்
தொடர்பாக பலரும் பல கருத்தை தெரிவிப்பதால் உண்மை நிலையை அறிய
எஸ்.ஆர்.சிங்காரவேலு தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படுவதாக
கூறியுள்ளார்.
Comments