கிருஷ்ணகிரி: கர்நாடகாவில் பெய்த கனமழையால் ,கிருஷ் ராஜசாகர், கபினி,
ஹராஙகி, ஹேமாவதி உள்ளிட்ட அணைகளில் நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
இதைடுத்து ஒகேனக்கலில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. தற்போது
ஒகேனக்கலில் விநாடிக்கு 30ஆயிரம் கன அடி நீர் வரத்து அதிகரித்து வருவதால்
சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலா வந்த
பயணிகள் ஏமாற்றத்துடன திரும்பினர். காவிரிககரை பகுதி மக்களுக்கும் வெள்ள
அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால்,அவர்கள் கரையோரங்களை விட்டு
பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
இதற்கிடையே தமிழகம், மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் கன மழை பெய்யலாம் எனவும், சென்னையில் வானம் மேக மூட்டத்துடன், லேசான மழை பெய்யலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Comments