கோச்சடையானைப்பார்த்து திருப்தி அடைந்த ரஜினி!

பிரான்சில் நடந்த உலக திரைப்பட விழாவின்போதே கோச்சடையான் படத்தின் ட்ரெய்லரை வெளியிட திட்டமிட்டிருந்தார் ரஜினி. ஆனால் அப்போது தயாரிக்கப்பட்டிருந்த ட்ரெய்லர் ரஜினிக்கு பிடிக்கவில்லை. அதனால், உலகத்திரைப்பட விழாவில் வெளியிடும் அளவுக்கு இது தகுதி வாய்ந்ததாக இல்லை என்று வேறு பாணியில் புதிய ட்ரெய்லரை வடிவமைக்கச்சொன்னார். அதனால் அப்போதைக்கு ட்ரெய்லர் வெளியீ


ஆனால் பல மாதங்களுக்குப்பிறகு இப்போது எடிட்டிங், டப்பிங், பின்னணி இசைக்கோர்ப்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. இந்த சமயத்தில் சுறா மீனுடன் ரஜினி சண்டையிடுவது உள்ளிட்ட சில பிரமாண்டங்களும் சேர்க்கப்பட்டபிறகு படத்தை பார்த்த ரஜினிக்கு முழு திருப்தி ஏற்பட்டுள்ளதாம்.

மேலும், சரித்திர கதையில் உருவாகியுள்ள இந்த அனிமேசன் படத்தில் இளமையான கேரக்டரில் நடித்துள்ள ரஜினி கேரக்டர் நிறைய சாகசங்களை செய்கிறாராம். காட்டுக்குள் முகாமிட்டு ஒரு பெரும் படையை உருவாக்கும் இவர், தந்தை மற்றும் நாட்டை மீட்கும் காட்சிகள் ஹாலிவுட் படங்களில் இடம்பெறும் சண்டை காட்சிகளுக்கு இணையாக மிகப்பிரமாண்டமாக படமாக்கப்பட்டுள்ளதாம்.

அதனால் இப்படம் எனக்கு திருப்தி அளித்தது போல் உலக அளவில் அனைத்துதரப்பு ரசிகர்களையும் கண்டிப்பாக கவரும் என்று கருத்து சொல்லியிருக்கிறாராம் ரஜினி.
டு நடத்தப்படவில்லை.

Comments