புதுடில்லி:ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கில் , சற்றுச்சூழல் மாசுபடுவதாக
கூறி, தமிழக அரசு மூட உத்தரவிட்டது. இதை எதிர்த்து டில்லி தேசிய பசுமை
தீர்ப்பாயத்தில் அப்பீல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று நடந்தது.
இதில் தேசிய பசுமை தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவில், 4 பேர் கொண்ட
நிபுணர்கள் குழு ஆய்வு செய்து அறிக்கை செய்து வருகிறது. இதில் ஆலையால்
காற்று மாசுபடவில்லைஎன கூறியுள்ளது. எனவே இறுதி உத்தரவு வரும் வரையில்,
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தொடர்ந்து செயல்பட தடையில்லை. இவ்வாறு அந்த
உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
Comments