அந்த நண்பரின் பெயர் பாரதி. இளவரசனுக்கு மிகவும் நெருக்கமானவர்.
இவருடன்தான் எப்போதும் நெருக்கமாக பழகி வருவார் இளவரசன் என்று
கூறப்படுகிறது.
இளவரசன் கல்லூரி இடைவேளையிலும், விடுமுறை நாட்களிலும் அரசு கலைக்கல்லூரி
பின்புறம் உள்ள தண்டவாளம் அருகே உள்ள திண்டில் அமர்ந்து நண்பர்களுடன்
பேசிக்கொண்டு இருப்பார். இந்த விவரம் அவரது நண்பர் பாரதிக்கு தெரியும்.
அவர்தான் இளவரசனை கொலை செய்ய வந்த கும்பலுக்கு தகவல் தெரிவித்தார் என்று
இளவரசனின் தந்தை இளங்கோவனும் கூறியுள்ளார் என்பதால் பரபரப்பு கூடியுள்ளது.
பாரதியின் செல்போன் எண் மற்றும் இளவரசனின் செல்போன் எண்களுக்கு வந்த
அழைப்புகள் மற்றும் அவர்கள் யாரிடம் பேசினார்கள் என்ற விவரத்தையும்,
இளவரசன் இறந்த அன்று அவர் யாருடனெல்லாம் பேசினார் என்றும், அவர் செல்போன்
சிக்னல் எந்தெந்த இடங்களை காட்டியது என்ற விவரங்களையும் தனிப்படை போலீசார்
சேகரித்து விசாரித்து வருகிறார்கள்.
இருப்பினும் பாரதி விவகாரம் குறித்து போலீஸ் தரப்பில் எந்தத் தகவலும்
தெரிவிக்கப்படவில்லை.
Comments