பின்னர் நண்பர்களுடன் வெளியே செல்வதாக கூறி விட்டு மோட்டார்
சைக்கிளில் சென்றான்.
இந்தநிலையில் நான் உறவினர் வீட்டில் இருந்த போது பகல் ஒரு மணி அளவில் எனது
மகன் இறந்தது எனது உறவினர்களுக்கு தெரிந்திருக்கிறது. ஆனால் அவர்கள்
என்னிடம் தகவல் சொல்ல வில்லை. சிறிது நேரம் கழித்துதான் தகவல் சொன்னார்கள்.
நான் அவன் இறந்து கிடந்த இடத்திற்கு சென்று பார்த்தேன். அவன் தற்கொலை
செய்து கொண்டது போல் தெரிய வில்லை. அவன்தான் அன்று காலையில் எங்களுக்கு
நம்பிக்கை சொன்னான். நிலைமை சீக்கிரம் சரியாகிடும்மா என்றான்.
அவன் தற்கொலை செய்திருக்க வாய்ப்பு இல்லை. இது கொலைதான். அவனை யாரோ கொன்று
போட்டிருக்கிறார்கள்.
திவ்யா பயன்படுத்திய ஆடைகள் உள்ளிட்ட எதையும் அவன் எடுத்துச் செல்லவில்லை.
அவை வீட்டிலேயே உள்ளன. அதனை பார்த்தால் திவ்யாவின் ஞாபகம் அவனுக்கு வரும்
என்பதால் நாங்கள் எங்களது சொந்த வீட்டுக்குக் கூட போகவில்லை," என்றார்.
Comments