கற்பழித்து, கொன்று, வாயில் பீர் பாட்டிலை செருகி.. கடலூர் அருகே கொடுமை

கடலூர்: கடலூர் அருகே தனியாக வசித்து வந்த விதவைப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்து வாயில் பீர் பாட்டிலை செருகி வைத்து விட்டுப் போயுள்ளனர் கொடூரர்கள். கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகில் உள்ள வாலிஷ்பேட்டை என்ற பகுதியைச் சேர்ந்தவர் 34 வயதான மேரி. இவரது கணவர் இறந்து விட்டார். ஒருமகன் இருக்கிறார். அவர் கேரளாவில் வேலை பார்த்து வருகிறார். மேரி பிணமான நிலையில் ஒரு கரும்புத் தோட்டத்தில் கிடந்ததை போலீஸார் கண்டுபிடித்துள்ளனர். அலங்கோலமான நிலையில் அவர் கிடந்தார். பாலியல் பலாத்காரம் செய்துஅவரைக் கொன்றுள்ளனர். மேலும் வாயில் பீர் பாட்டிலையும் செருகிவைத்து விட்டுப் போயுள்ளனர். இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments