கும்பகோணம்: கும்பகோணம் பள்ளி தீ விபத்தின் 9-ம் ஆண்டு நினைவு தினம்
இன்று அனுசரிக்கப்பட்டது. தஞ்சை மாவட்டம் கும்பகோணம் , அருகே காசிராமர்
தெருவில் உள்ள பள்ளி ஒன்றில் கடந்த 2004-ம் ஆண்டு ஜூலை 16-ம் தேதியன்று
திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் தீ விபத்தில்
இருந்து தப்பித்து
வெளியேற முடியாமல் 90-க்கும் மேற்பட்ட குழந்தைகள் தீயில் கருகி பரிதாபமாக
பலியாயினர். தமிழகத்தையே உறைய வைத்த இந்த சம்பவத்தின் நினைவு
தினத்தையொட்டி அப்பள்ளி வளாகத்தில், குழந்தைகளை பறிகொடுத்த பெற்றோர்
மற்றும் பொதுமக்கள் மெழுகு வர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். குழந்தைகளை
இழந்த பெற்றோர் கண்ணீர் விட்டு அழுதனர்.
Comments