தமிழகத்தில் இட்லி... மே.வங்கத்தில் சிக்கன்...! தேர்தலை குறிவைக்கும் "மலிவு விலை' அரசியல்

கோல்கட்டா:தமிழகத்தில், மலிவு விலை உணவகங்களில் இட்லி விற்பனை செய்யப்படுவது போல், மேற்கு வங்கத்தில், வேன்கள் மூலமாக, சிக்கன், மீன் ஆகியவற்றை, பொதுமக்களுக்கு மலிவு விலையில் விற்கும் திட்டத்தை, அம்மாநில முதல்வர், மம்தா பானர்ஜி துவக்கியுள்ளார்.

ஏழை மக்கள்:தமிழகத்தில், ஏழை மக்கள் பயனடைவதற்காக, மாநகராட்சிகளில், மலிவு விலை உணவகங்கள்
துவக்கப்பட்டு, வெற்றிகரமாக செயல்பட்டு வருகின்றன.இந்த உணவகங்களில் இட்லி, தயிர் சாதம், சாம்பார் சாதம் உள்ளிட்ட, உணவு வகைகள், மலிவு விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. இதேபோல், மலிவு விலை காய்கறி கடைகளும் துவங்கப்பட்டு உள்ளன.அடுத்தாண்டு நடக்கவுள்ள லோக்சபா தேர்தலில், மக்களை கவரும் வகையில், மத்திய அரசும், அவசர சட்டத்தின் மூலம், உணவு பாதுகாப்பு மசோதாவை நிறைவேற்றி, மிக குறைந்த விலையில், அரிசி, கோதுமை உள்ளிட்ட உணவு தானியங்களை விற்பனை செய்ய, நடவடிக்கை எடுத்து வருகிறது.இதைத் தொடர்ந்து, மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்., தலைவருமான மம்தா பானர்ஜி, "உணவு அரசியல்' களத்தில் குதித்துள்ளார். பொதுமக்களுக்காக, வேன்கள் மூலமாக, சிக்கன் விற்பனை செய்யும் திட்டம் துவக்கப்பட்டு உள்ளது.


வேன்கள்:

முதல் கட்டமாக, கோல்கட்டாவில் மட்டும், இந்த திட்டம் து

இதுகுறித்து, அரசியல் வட்டாரங்கள் கூறுகையில், "லோக்சபா தேர்தல் நெருங்குவதால், அதில் வெற்றி பெறுவதற்காக, மாநில அரசுகள், மலிவு விலையில் பொருட்களை விற்கும் அரசியலில் குதித்துள்ளன' என்கின்றன.
வக்கப்பட்டு உள்ளது. இதற்காக, 21 வேன்கள், கோல்கட்டா முழுவதும் வலம் வருகின்றன. இந்த திட்டம் குறித்து, முதல்வரின் விவசாயத் துறை ஆலோசகர், பிரதீப் மஜும்தார் கூறியதாவது:சமீபகாலமாக, சிக்கன் விலை, அளவுக்கு அதிகமாக உயர்ந்துள்ளது. நடைபாதைகளில், சட்ட விரோதமாக கோழிகளை வெட்டி, விற்பனை செய்கின்றனர். இதனால், சுகாதாரக் கேடு ஏற்படுகிறது. இது போன்ற பிரச்னைகளுக்கு முடிவு கட்டும் வகையில், இந்த திட்டம் துவக்கப்பட்டு உள்ளது.இந்த திட்டத்தின் மூலம், சந்தை விலையை விட, குறைவான விலையில் சிக்கன் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் சந்தையில், அளவுக்கு அதிகமாக விலை வைத்து விற்பனை செய்வதை தடுக்க முடிவதோடு, பொதுமக்களுக்கும் பயன் கிடைக்கிறது.இந்த திட்டம், வெற்றிகரமாக செயல்படுவதை தொடர்ந்து, அடுத்ததாக, வேன்கள் மூலம் மீன், காய்கறிகளை விற்கவும், திட்டமிடப்பட்டு உள்ளது.இவ்வாறு, பிரதீப் மஜும்தார் கூறினார்.

Comments