நடிகர் ரித்திக் ரோஷனுக்கு மூளை அறுவை சிகிச்சை முடிந்தது: நலமாக உள்ளார்

நடிகர் ரித்திக் ரோஷனுக்கு மூளை அறுவை சிகிச்சை முடிந்தது: நலமாக உள்ளார்மும்பை: பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷனுக்கு இன்று மும்பையில் உள்ள இந்துஜா மருத்துவமனையில் மூளை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷன் மும்பையில் உள்ள இந்துஜா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று காலை 10 மணிக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு பிற்பகலில் மூளையில் அறுவை சிகிச்சை நடந்தது. அவருக்கு சுமார் 50 நிமிடங்கள் அறுவை சிகிச்சை நடந்தது. மதியம் 3 மணிக்கு அறுவை சிகிச்சை அறையில் இருந்து அவர் வெளியே கொண்டு வரப்பட்டார்.
அவருக்கு துணையாக அவரது பெற்றோர், மனைவி சூசன் மற்றும் சகோதரி சுஹானா ஆகியோர் மருத்துவமனையில் உள்ளனர். ரித்திக் இன்னும் 48 மணி நேரத்தில் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவார் என்று அவரது தந்தை ராகேஷ் ரோஷன் தெரிவித்தார். முன்னதாக அவர் நேற்று மாலை தனது மகன்கள் 2 பேரிடமும் தனக்கு அறுவை சிகிச்சை நடக்கவிருக்கிறது என்றும், தனக்காக பிரார்த்தனை செய்யுமாறும் கூறியுள்ளார். உடல் நலம் சரியில்லாததால் தான் ரித்திக் அண்மை காலமாக பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவில்லை. முன்னதாக அவருக்கு பாங் பாங் படப்பிடிப்பின்போது தலையில் அடிபட்டது. இதையடுத்து தான் அவருக்கு மூளை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Comments