கோல்கட்டாவில் திடீர் பதட்டம் ; மத்திய அமைச்சர் மீது தாக்குதல் ?

கோல்கட்டா: பஞ்சாயத்து தேர்தல் நடந்து வரும் மேற்குவங்கத்தில் இன்று மத்திய சுகாதார துறை இணை அமைச்சர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் இங்கு பதட்டம் நிலவுகிறது. ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் இந்த தாக்குதலை நடத்தியிருப்
பதாக போலீஸ் வட்டாரம் தெரிவிக்கிறது.
மேற்கு வங்கத்தில் பல கட்டங்களாக பஞ்சாயத்து தேர்தல் நடக்கிறது. நேற்று நடந்த தேர்தல் வன்முறையில் பெண் வேட்பாளர் கணவன் உள்பட 3 பேர் கொல்லப்பட்டனர். பல பூத்துகள் அடித்து நொறுக்கப்பட்டன.
இடது சாரி மற்றும் திரிணாமுல் காங்., தொண்டர்கள் பல இடங்களில் மோதிக்கொண்டனர்.


இந்நிலையில் இங்கு பிரசாரம் செய்ய மத்திய சுகாதார துறை இணை அமைச்சர் அபுஹசீம்சவுத்ரி, காங்., தொண்டர்களுடன் மால்டா மாவட்டத்திற்கு சென்றார். திறந்த வேனில் பிரசாரம் செய்து கொண்டிருந்தார்.

இந்நேரத்தில் வந்த ஒரு கும்பல் அங்கு கூடியிருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தியது. தொடர்ந்து நாட்டு வெடிகுண்டுகளும் வீசப்பட்டடன. சிலர் துப்பாக்கியால் சுட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால் அமைச்சர் மற்றும் தொண்டர்கள் காயமுற்றனரா என்ற தகவல் இன்னும் முழுமையாக அறியப்படவில்லை. இதனால் அங்கு பதட்டம் நிலவுகிறது. இந்த தாக்குதலை ஆளும் திரிணாமுல் காங். கட்சியினர் தான் நடத்தியிருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Comments