மும்பை : அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பில்
இன்று(ஜூலை 25ம் தேதி) ஏற்றம் காணப்படுகிறது. காலையில் வர்த்தகநேர
துவக்கத்தில் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 21 காசுகள் சரிந்து
ரூ.59.34-ஆக இருந்தது. பின்னர் ரூபாயின் மதிப்பில் ஏற்றம் காணப்பட்டது.
11.30 மணியளவில் ரூபாயின் மதிப்பு ஏற்றம் அடைந்து ரூ.58.92-காசுகளாக
இருந்தது. முன்னதாக நேற்று(ஜூலை 24ம் தேதி) கடந்த ஒரு மாதங்களில் இல்லாத
அளவுக்கு 63 காசுகள் ஏற்றத்துடன் ரூ.59.13-ஆக முடிந்தது இந்திய ரூபாயின்
மதிப்பு.
Comments