இளைஞர்களின் குரலையே பிரதிபலிக்கிறேன்: மோடி பேச்சு

புனே: இளைஞர்களின் குரலையே பிரதிபலிக்கிறேன், அவர்களின் கனவுகளையே நான் பேசுகிறேன். இளைஞர்களின் சக்தி மேம்படுத்தப்பட வேண்டும் , சீனாவை போல் கல்வியில் புரட்சி ஏற்படுத்த வேண்டும், இதற்கான தரமான வழிமுறைகள் வகுக்கப்பட வேண்டும் என்று புனேயில் கல்லூரி மாணவர்கள் இடையே பேசிய மோடி தெரிவித்தார். குஜராத் முதல்வர் நரேந்திர மோடி இன்று மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் ஃபெர்குசன் கல்லூரி மாணவர்கள் மத்தியில் பேசினார் அப்போது அவர் கூறியதாவது;


சமூக வலைதளங்கள் :

சுந்திர போராட்ட காலத்தில் இந்த கல்லூரி மாணவர்களின் பங்கு மறக்க முடியாதது. காரணம் ,சுந்திர போராட்ட வீரர் வீர்சவார்கர் இந்த கல்லூரியில் தான் படித்தார். அவர் படித்த இக்கல்லூரியில் பேசும் அரிய வாய்ப்பை நான பெற்றுள்ளேன். இன்றைய இளைஞர்களை ஒன்றிணைக்க சமூக வலைதளங்கள் தான் முக்கிய காரணி,அதனை நான் தீவிரமாக செயல்படுத்தி வருகிறேன். காஷ்மீர் முதல் கன்னியாகுமரிவரை இதனை நான் தொடர்பு வைத்துள்ளேன்.
இக்கல்லூரிக்கு நான் வருகை தரும் முன்பு பேஸ் புக் வாயிலாக தான் மாணவர்களிடம் தொடர்பு கொண்டேன். தினமும் எனக்கு 2500 ‌இளைஞர்கள் , ஆலோசனைகளை சமூக வலைதளம் மூலம் வழங்கி வருகின்றனர். இளைஞர்களின் கருத்துக்களுக்கு நான் முன்னுரிமை ‌கொடுக்கிறேன். அவர்களின் கருத்துக்களை பிரதிபலிக்கிறேன். இதனை நாடு முழுவதும் உள்ள இளைஞர்களின் ஆலோசனை கேட்டறிகிறேன். சமூகவலைதளம் இன்று முக்கிய பங்காற்றுகிறது. இளைஞர்கள் தான் இந்த நாட்டின் வருங்கால சக்தி. இந்த உலகில் எதையும் சாதிக்க கூடிய திறமை இளைஞர்களிடம் தான் உள்ளது.
நமது தலைவர்கள் குறுகிய மனப்பான்மை கொண்டுள்ளனர். இந்த நாட்டு இளைஞர்கள் நாட்டில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என நினைக்கின்றனர். கல்வி நிறுவனங்கள் பணம் சம்பாதிக்கும் கருவிகளாக மாறி விட்டன. மனிதர்களை உருவாக்கும் எண்ணம் இல்லை. நான் இன்று அரசியல் எதுவும் பேச விரும்வில்லை.

சீனாவின் கல்வி கொள்கைக்கு பாராட்டு

: சீன கல்வி மிகச்சிறந்ததாக உள்ளது. சீனா கடந்த 10 ஆண்டுகளில் கல்வி முறையை மாற்றியுள்ளது. சீனா தனது நாட்டின் சீரமைக்கும் வழியை பார்க்க வேண்டும். ஆங்கில மொழி அறிவை வளர்க்க வழி செய்கின்றனர். கல்வி முன்னேற்ற கொள்கையில் நாம் சீனாவை பின்பற்ற வேண்டும். நாம் இந்தியாவை 21 ம் நூற்றாண்டை வழி நடத்தி செல்ல வேண்டும். நாம் சுதந்திரம் அடைந்தது முதல் இன்னும் கல்வியில் பெரும் மாற்றத்தை கொண்டு வரவில்லை. மருத்துவ படிப்பிற்கு நமது குழந்தைகள் வெளிநாடுகள் செல்ல வேண்டியுள்ளது. மொத்த பொருளாதார உற்பத்தியில் 25 சதம் கல்விக்கானதாக இருக்க வேண்டும். நமது கொள்கைகள் சரியில்லை. பழங்கால கல்வி முறை மாற வேண்டும்.
தென்கொரியாவை பாருங்கள் :

மிகச்சிறிய நாடான தென்கொரியா உலக அளவில்சிறந்து விளங்குகிறது. அந்நாடு ஒலிம்பிக் போட்டியை சிறப்பாக நடத்தி புகழை தட்டிச்சென்றது. ஆனால் நாம் காமன் வெல்த் விளையாட்டு போட்டி நடத்தி கேவலத்திற்குள்ளானோம். இந்தியாவை முன்னேற்ற வேண்டும். நமக்கு சரியான வழிமுறைகள் வேண்டும். பார்மஸி செக்டர் குஜராத்தில் 50 ஆண்டுகளுக்கு முன்னதாகவே அமைந்து விட்டது. இந்தியா ஆயுதங்களுக்கு அதிகம் செலவழிக்கிறது. வெளிநாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை விட அதிகம். இந்தியா அண்டைய நாடுகளுடன் நட்புறவில் இல்லை.
சுற்றுலாத்துறை மிக பலம் வாய்ந்தது. ஆனால் இந்தியாவில் இது முன்னேற்றம் காணவில்லை. ஆய்வுகள், கண்டுபிடிப்புகள், புதுபடைப்புகள், போன்றவற்றுக்கு நாம் அதிக முக்கியத்துவம் கொடுக்கவில்லை. புதுமைகள் கண்டுபிடிக்கப்பட்டால் விவசாயத்தை முன்னேற்ற பாதைக்கு அழைத்து செல்ல முடியும். ஆனால் இது குறித்து யாரும் கவலைப்படவில்லை.

கடல் சார்ந்த படிப்புகள் :

கடல் மற்றும் துறைமுகம் சார்ந்த படிப்புகள் மேம்படுத்தப்பட வேண்டும். இந்தியாவில் 3 ல் இரண்டு பங்கு கடல் பகுதிகள் ஆனால் சிங்கப்பூர் சிறிய கடல் பகுதியை கொண்டு மிகுந்த கடல்வழி வர்த்தகம் செய்கிறது. சிறந்த கல்வியும், சிறந்த கல்வியாளர்களும் தேவை, நமது பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளிடம் இருந்து நல்ல கல்வியை எதிர்பார்க்கின்றனர். நமது நாட்டுக்கு அதிகம் டாக்டர்கள் தேவைப்படுகின்றனர். ஆனால் நாம் அதிகம் டாக்டர்களை உருவாக்குவதில்லை, பலரும் அதிகாரத்திற்கு வர விரும்புகின்றனர். ஆனால் நான் அதிகாரமளிக்க விரும்புகிறேன். எதிர்மறை கருத்துக்களை நான் ஏற்க மாட்டேன். பாதுகாப்பு தொழில்நுட்ப படிப்பு இந்திய பாதுகாப்பு பல்கலை.,யில் இல்லை. பாதுகாப்பு துறையில் கடந்த 10 ஆண்டுகளாக உயர் பொறுப்பு நிரப்பப்படாமல் உள்ளது. 10 ஆண்டுகளுக்கு பின்னர் இந்தியா ஒரு பல்கலை., நிறுவியது. ஆனால் சீனா 32 பல்கலை., நிறுவியுள்ளது. மேற்கத்திய கலாச்சாரம் தேவையில்லை. நவீனமயமாதல் தான் வேண்டும். இவ்வாறு மோடி பேசினார்.

Comments