
சென்னை: திமுகவில் குஷ்பு சேர்ந்தது முதல் செய்திகளில் எப்படியாவது
இடம்பெற்றே வருகிறார்.. அண்மைக்காலமாக திமுகவில் தலை காட்டாமல் இருக்கும்
அவருக்கு விரைவில் ‘கல்தா' கொடுக்கப்படும் என்கிறது அறிவாலய வட்டாரங்கள்.
ஜெயா தொலைக்காட்சியில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த நடிகை
குஷ்பு, ‘கற்பு'பற்றி கருத்து தெரிவித்து சர்ச்சையில் சிக்கினார். பின்னர்
அவர் காங்கிரஸில் இணைவார் என்று சொல்லப்பட்ட
நேரத்தில் திமுக
‘உறுப்பினரா'னார். பின்னர் திமுகவின் தலைமைக் கழகம் அறிவிக்கின்ற சிறப்பு
பொதுக் கூட்டங்களில் குஷ்புவும் கலந்து கொண்டார்.
இந்நிலையில் திமுக தலைவர் பதவி பற்றிய விவகாரத்தில் மு.க. ஸ்டாலினுக்கு
எதிராக அவர் கருத்து தெரிவிக்கப் போய் ‘அடிவாங்க' நேரிட்டது. அன்று முதல்
திமுகவில் இறங்குமுகமாகவே இருந்து வருகிறார் குஷ்பு. இருப்பினும்
அவ்வப்போது ஏதாவது ஒரு கூட்டத்தில் தலையைக் காட்டி தமது இருப்பை
வெளிப்படுத்தி வந்தார்.
ஆனால் அண்மையில் சேது சமுத்திர திட்டம் தொடர்பான கூட்டங்கள் நடந்த போது
குஷ்பு கலந்து கொள்ளவில்லை. திமுக தலைமைக் கழக அறிவிப்பிலும் குஷ்பு பெயர்
இல்லையாம்.. இதேபோல எம்.பி. ஆன கனிமொழியை வாழ்த்துவதற்கும் அவர் வரவில்லை.
இதையெல்லாம் கூட்டிக் கழித்துப் பார்த்தால் அனேகம் குஷ்பு அவராகவே திமுகவை
விட்டு வெளியேறிவிடுவார் அல்லது கல்தா கொடுக்கப்பட்டு விடும் என்கிறது
திமுக வட்டாரங்கள்.
Comments