
டெல்லி: உணவு பாதுகாப்பு அவசர சட்டத்தை ரத்து செய்யக் கோரி
உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
நாட்டில் வறுமைக்கோட்டுக்கு கீழே வாழும் 80 கோடி பேருக்கு கிலோ ரூ.3க்கு 5
கிலோ அரிசியும் ரூ.2க்கு 5 கிலோ கோதுமையும் வழங்குவதை உறுதி செய்யும் உணவு
பாதுகாப்பு அவசர சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் கொடுத்திருந்தது.
இத்திட்டத்துக்கு ஜனாதிபதியும் ஒப்புதல் தெரிவித்துள்ளார்.
இத்திட்டத்தை
நிறைவேற்ற ரூ1.25 லட்சம் கோடி தேவைப்படும்.
இந்நிலையில் வழக்கறிஞர் எம்.எல். சர்மா, உணவு பாதுகாப்பு சட்டத்தை ரத்து
செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் இன்று பொதுநல மனுவை தாக்கல் செய்துள்ளார்.
அம்மனுவில், அவசர சட்டங்களை அசாதாரணமான சூழ்நிலையில் தான் மத்திய அரசு
நிறைவேற்ற வேண்டும். தற்போதைய நிலவரப்படி அசாதாரணமான சூழ்நிலை ஏதும்
நிலவவில்லை. பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடர் இன்னும் 3 வாரத்தில்
தொடங்க இருக்கும் நிலையில் இப்படி அவசர சட்டமாக நிறைவேற்றியது அரசியலமைப்பு
சட்டத்திற்கு எதிரானது. இதனால் இதை ரத்து செய்ய வேண்டும் என்று அவர்
வலியுறுத்தியுள்ளார்.
Comments