இளவரசன் மரணம்... திவ்யா கதறல்.. சாப்பிட மறுப்பு - தாய் தகவல்

இளவரசன் மரணம்... திவ்யா கதறல்.. சாப்பிட மறுப்பு - தாய் தகவல்தர்மபுரி: தலையில் பலமாக தாக்கி கொல்லப்பட்ட இளவரசன் மரணச் செய்தி கேட்டதிலிருந்து அவரைப் பிரிந்து சென்ற மனைவி திவ்யா கதறி அழுததாகவும், சாப்பிட மறுத்ததாகவும் தாயார் தேன்மொழி தெரிவித்துள்ளார். இதுகுறித்து திவ்யாவின் தாய் தேன்மொழி கூறுகையில், "எனது மகள் அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியால் உடைந்து போயிருக்கிறாள். எதுவும் சாப்பிட மறுக்கிறாள். முதலில் தந்தையை இழந்தாள். இப்போது இளவரசனின் சாவு செய்தி அவளை மிகுந்த மனஅழுத்தத்தில் தள்ளி உள்ளது. அதிலிருந்து மீள முடியாமல் தவிக்கிறாள்.
இளவரசன் இப்படி ஒரு முடிவை எடுப்பான் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. அவன் மரணச் செய்தி கேட்டு கதறி அழுதாள் திவ்யா. அவளுக்கு ஆறுதல் சொல்ல முடியாமல் நாங்களும் தவிக்கிறோம். என் மகளை இந்த சோகத்தில் இருந்து மீட்க வேண்டும். அதற்காக முயற்சித்து வருகிறேன்," என்றார். திவ்யாவையும் தேன்மொழியையும் இன்று காலை சென்னையிலிருந்து தர்மபுரிக்கு அழைத்து வந்த பாமகவினர், அவர்களை மாவட்ட எஸ்பியிடம் ஒப்படைத்துள்ளனர். அவர்களுக்கு போதிய பாதுகாப்பு வழங்க எஸ்பி அஸ்ரா கார்க் உறுதியளித்துள்ளார்.

Comments