லண்டன்: பிரிட்டிஷ் இளவரசர் வில்லியம்சின் மனைவி, கேட் மிடில்டனுக்கு இன்று
அழகான ஆண் குழந்தை பிறந்தது. பிரிட்டிஷ் இளவரசர் வில்லியம்சின் மனைவி கேட்
மிடில்டன், பிரசவத்திற்காக, லண்டனில் உள்ள செயின்ட் மேரீஸ்
மருத்துவமனையில், கடந்த வாரம் அனுமதிக்கப்பட்டார். பத்திரிகை மற்றும்
"டிவி' நிருபர்கள், மருத்துவமனை வளாகத்தில், இரவு பகல் பாராமல், காத்துக்
கிடந்தனர்.
அறிவிப்பு விவரம்: குழந்தை பிறப்பு பற்றிய செய்தி, முதலில், மருத்துவமனை மருத்துவரின் மூலம், ஒரு சீட்டில் எழுதப்பட்டு, அரண்மனை, கார் ஓட்டுனரிடம் கொடுக்கப்படும். அங்கிருந்து அரண்மனைக்கு கொண்டு செல்லப்பட்டு, அரச குடும்பத்தாரின் ஒப்புதலுக்குப் பின், பொதுமக்களின் பார்வைக்காக, தகவல் பலகையில் ஒட்டப்படும். இந்த முறையான நிகழ்வுகளுக்கு முன்னரே, செய்திகளை ஒளிபரப்பும் ஆர்வத்தில் ஊடகங்கள் செயல்படுவதால், கடிதத்தை தெளிவாக பெரிதாக்கி காட்டும் கேமராக்களுடன், பத்திரிகையாளர்கள் வலம் வருகின்றனர். மேலும், வில்லியம்சின் மனைவி, கேட், எந்த நேரத்திலும், குழந்தையுடன் மருத்துவமனையிலிருந்து வெளியே வரலாம் என்பதால், மருத்துவமனையின் அனைத்து வாயில்களிலும், ஊடகங்களின் கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன.
உற்சாக கொண்டாட்டம்:பிரிட்டன் மட்டுமின்றி, சீனா, ஜப்பான், கொரியா, அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பத்திரிகையாளர்களும், மருத்துவமனை வளாகத்தில் முகாமிட்டு உள்ளனர். இளவரசிக்கு, குழந்தை பிறந்தவுடன், லண்டனில், 62 குண்டுகள் முழங்கி, வரவேற்பு அளிக்கவும், தேம்ஸ் நதிக்கரையில், வாணவேடிக்கை நடத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
Comments