என்.எல்.சி நிறுவன பங்குகளை விற்கவே கூடாது: வைகோ திட்டவட்டம்

என்.எல்.சி நிறுவன பங்குகளை விற்கவே கூடாது: வைகோ திட்டவட்டம்  விருதுநகர்: என்.எல்.சி நிறுவனத்தின் பங்குகளை யாருக்கும், எதற்காகவும் விற்பனை செய்யக்கூடாது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ திட்டவட்டமாக கூறியுள்ளார். விருதுநகரில் செப்டம்பர் 15 அண்ணா பிறந்தநாள் விழா மாநாடு நடைபெற உள்ளது. இதற்கான இடத்தை பார்வையிடுவதற்காக வைகோ என்று விருதுநகர் வந்திருந்தார். சூளக்கரையில் மாநாடு நடைபெறும் இடத்தை பார்வையிட்டு தேர்வு செய்த அவர், பிரபல பந்தல் அமைப்பாளர் தஞ்சை பந்தல் சிவா மற்றும் மவட்ட செயலாளர் சண்முகசுந்தரம், இணையதள ஒருங்கிணைப்பாளர் மின்னல் முகமது அலி, மாவட்ட அவைத்தலைவர் ஆசிரி யர் நாராயணசாமி, மாவட்ட துணை செயலாளர்கள் இலட்சுமணன், சிவசக்தி குமரேசன், நகர செயலாளர் இராமர், வழக்கறிஞர் ரவீந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, ஆண்டுதோறும் அண்ணா பிறந்தநாள் விழா செப்டம்பர் 15ம் தேதி மதிமுக சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு மிகப்பெரிய அளவில் விருதுநகரில் நடைபெற உள்ளது. இதற்கான இடம் சூளக்கரையில் தேர்வு செய்யப்பட்டுள்ளது. என்.எல்.சி நிறுவனத்தின் 1 சதவிகித பங்குகளை கூட விற்கக்கூடாது என்பதுதான் எங்களின் நிலைப்பாடு. ஆனால் 5 சதவிகித பங்குகளை தமிழக அரசு கோருவது நியாயமாகது. இது ஒட்டகம் உள்ளே நுழைந்த கதையாகிவிடும். ஒருமுறை பங்கு விற்பனை செய்யப்பட்டு விட்டால் படிப்படியாக விற்கத் தொடங்கிவிடுவார்கள். பின்னர் அது ஒட்டுமொத்தமாக தனியார்வசமாகிவிடும் என்றார்.

Comments