இந்திய சிறுமிக்கு முதல் மலாலா விருது

புதுடில்லி: உ.பி.,யை சேர்ந்த 15 வயது சிறுமி மற்றும் பெங்களூரை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு முதலாவது மலாலா விருது வழங்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் பெண்கள் கல்விக்காக போராடிய சிறுமி மலாலாவை தலிபான் பயங்கரவாதிகள் சுட்டனர். இதில் பலத்த காயமடைந்த மலாலா, லண்டனில் சிகிச்சையளிக்கப்பட்டு காப்பாற்றப்பட்டார். நேற்று மலாலாவின் பிறந்தநாள். இந்த நாளை மலாலா தினமாக ஐ.நா., அறிவித்துள்ளது.
இந்த நாளில் குழந்தைகளின் கல்விக்காக போராடுபவர்களுக்கு மலாலா விருது வழங்கி ஐ.நா., கவுரவிக்க முடிவு செய்தது. இதனையடுத்து முதல் மலாலா விருது, உ.பி.,யை சேர்நத 15 வயது சிறுமி ரசியா சுல்தானுக்கு வழங்கப்பட்டுள்ளது. முன்னாள் குழந்தை தொழிலாளியான இந்த சிறுமி, மீரட் பகுதியில் 48 குழந்தை தொழிலாளர்களை மீட்டு பள்ளியில் சேர்த்துள்ளார். இதற்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இதேபோல் பெங்களூரை சேர்ந்த அஸ்வினி என்ற பெண்ணுக்கு, மாற்றுத்திறனாளி குழந்தைகளின் கல்விக்காக போராடியதற்காகவும் விருது வழங்கப்பட்டுள்ளது.

Comments