
இதுகுறித்து, நேற்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:இந்துமுன்னணி, பா.ஜ., தலைவர்கள், வேலூர் மற்றும் சேலத்தில்
அரவிந்த ரெட்டி :
கடந்தாண்டு,
அக்டோபர், 23ம் தேதி, வேலூரில், பா.ஜ., மருத்துவ பிரிவு செயலர்,
டாக்டர்.அரவிந்த ரெட்டி, கொடுக்கல் வாங்கல் தகராறில் கொல்லப்பட்டார். இந்த
வழக்கில், வேலூரைச் சேர்ந்த, வசூர்ராஜா, உதயகுமார், தங்கராஜ், சந்திரன்,
எம்.எல்.ஏ., ராஜா, பிச்சை பெருமாள் மற்றும் தரணிகுமார் ஆகியோர் கைது
செய்யப்பட்டு, குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஆர்.எஸ்.எஸ்., செயலர்:
மேலும்,
நவம்பர், 6ம் தேதி, கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில், ஆர்.எஸ்.எஸ்.,
பகுதி செயலர் ஆனந்தன், தாக்கப்பட்டார். இது பழி தீர்க்க, நடத்தப்பட்ட
தாக்குதல். இதில், வழக்குப் பதியப்பட்டு, சையது அபுதாகிர் என்பவர் கைது
செய்யப்பட்டார்.
தேங்காய்க்கடை முருகேசன் :
இந்தாண்டு,
மார்ச் மாதம், 19ம் தேதி, நிலப்பிரச்னை தொடர்பாக, பரமக்குடியில், பா.ஜ.,
நகர செயலர், தேங்காய்க்கடை முருகேசன் என்பவர் கொலை செய்யப்பட்டார். இது
தொடர்பாக, ராஜாமுகமது, மனோகரன், ரபீக்ராஜா, சாகுல் ஹமீது ஆகியோர் கைது
செய்யப்பட்டு, அவர்கள் தற்போது, தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ்,
சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். குற்றப்பத்திரிகை தயாராகி வருகிறது.
அர்ஜுன் சம்பத் :
ஏப்ரல்,
13ம் தேதி, கோவையில், இந்து மக்கள் கட்சி, மாநில தலைவர், அர்ஜுன் சம்பத்
வீட்டில், பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டில்கள் வீசப்பட்டன. இதில்,
உமர்பரூக், சதாம் உசேன் மற்றும், எட்டு பேர் கைது
செய்யப்பட்டனர்.இவர்களில், ஆறு பேர், குண்டர் சட்டத்தின் கீழ், சிறையில்
அடைக்கப்பட்டுள்ளனர்.
மஞ்சுநாத் :
மறுநாள்,
ஊட்டியைச் சேர்ந்த, இந்து முன்னணி மாவட்ட செயலர் மஞ்சுநாத், பொதுக்கூட்டம்
ஒன்றில், மத நம்பிக்கை குறித்து, அவதூறாக பேசியபோது, ரியாஸ் உல் ஹக்,
பைசல், அப்துல்ரஹீம், பைரோஸ் மற்றும் இம்தியாஸ் ஆகியோர், எதிர்ப்பு
தெரிவித்ததுடன், மஞ்சுநாத்தை தாக்கினர்.இந்த சம்பவத்தில், ஐந்து பேரும்
கைது செய்யப்பட்டதுடன், சர்ச்சைக்குரிய பேச்சு குறித்த புகாரை தொடர்ந்து,
வழக்குப் பதியப்பட்டு, மஞ்சுநாத்தையும் போலீசார் கைது செய்தனர். இரண்டு
வழக்கிலும், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விட்டது.
ஹரிகரன்:
தொடர்ந்து,
அம்மாதம், 16ம் தேதி, குன்னூரில், மசூதி சுவரில், இந்து முன்னணி
உண்ணாவிரதம் தொடர்பான, போஸ்டர் ஒட்டப்பட்டதை தொடர்ந்து, இந்து முன்னணி நகர
செயலர், ஹரிகரன் தாக்கப்பட்டார். இதில், அயூப், சதாம் மற்றும், 10 பேர்
கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கிலும் குற்றப்பத்திரிகை தாக்கல்
செய்யப்பட்டுள்ளது.
எம்.ஆர்.காந்தி:
ஏப்ரல்,
21ம் தேதி, கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில், பா.ஜ., மாநில நிர்வாக
குழு உறுப்பினர், எம்.ஆர்.காந்தி, தாக்கப்பட்டார். இதில், அப்துல் அஜீஸ்,
அப்துல் ஷமீம், ஷாஜி, முகமது சாலின், சையது அலி நிவாஸ் ஆகிய அனைத்து
குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டனர்.இவர்களில் மூவர், தேசிய பாதுகாப்பு
சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
குட்டை நம்பு:
இம்மாதம்,
7ம் தேதி, இந்து முன்னணி பிரமுகர், குட்டை நம்பு என்பவர், ராமேஸ்வரத்தில்,
தனிப்பட்ட விரோதம் காரணமாக, ராமச்சந்திரன் மற்றும் சண்முகநாதன் ஆகியோரால்,
தாக்கப்பட்டார். மருத்துவமனையில், குட்டை நம்பு இறந்ததையடுத்து, இருவரும்
கைது செய்யப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது.
வெள்ளையப்பன், ஆடிட்டர் ரமேஷ்:
இம்மாதம்
முதல் தேதி, இந்து முன்னணி மாநில செயலர், வெள்ளையப்பன், வேலூரில் கொலை
செய்யப்பட்டார். தொடர்ந்து, 19ம் தேதி, பா.ஜ., மாநில பொதுச் செயலர்,
ஆடிட்டர் ரமேஷ், சேலத்தில், மூன்று நபர்களால் கொலை செய்யப்பட்டார். இந்த
இரண்டு வழக்குகளையும், சி.பி.சி.ஐ.டி., - டி.ஜி.பி., கட்டுப்பாட்டில்,
சிறப்பு புலனாய்வுப் பிரிவை அமைத்து விசாரிக்க முதல்வர்
உத்தரவிட்டார்.மேலும், இந்த வழக்கு தொடர்பாக, தலைமறைவாக உள்ள, நால்வர்
பற்றிய, உபயோகமான தகவல்களை தருபவர்களுக்கு, ஐந்து லட்சம் ரூபாய் வீதம், 20
லட்சம் ரூபாய் சன்மானமும் அறிவிக்கப்பட்டுள்ளது.இது தவிர, இந்த, இரண்டு
கொலை சம்பவங்களிலும், தொடர்புடைய வேறு நபர்களை பற்றி தகவல் தந்தால், இரண்டு
லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே,
இந்து அமைப்புகளின் தலைவர்கள் மீதான தாக்குதல்கள் தொடர்பாக, தமிழக போலீஸ்,
தேவையான நடவடிக்கை எடுத்து வருகிறது என்பதற்காகவே இது கூறப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் சிலர், தேசிய பாதுகாப்பு சட்டத்திலும், குண்டர்
சட்டத்திலும் அடைக்கப்பட்டுள்ளனர். மிரட்டலை எதிர்கொள்ளும் நபர்கள் மற்றும்
அலுவலகங்களுக்கு, தேவையான போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
உண்மைக்கு புறம்பானது:
பட்டியலிடப்பட்ட
இந்த சம்பவங்களில் சில, தனிப்பட்ட விரோதம் காரணமாக நடந்தவை. சில
வழக்குகளில், குற்றவாளிகளும், பாதிக்கப்பட்டவர்களும் ஒரே மதத்தை
சேர்ந்தவர்களாக உள்ளனர். இந்து அமைப்பினரின், அறிக்கைகளில், குறிப்பிட்ட
நபர்களை இலக்காக வைத்து, தாக்குதல் நடத்துவது தடுக்கப்படவில்லை அல்லது,
வழக்குகள் கண்டுபிடிக்கப்படவில்லை என்ற எண்ணத்தை உருவாக்குவது தவறானது;
உண்மைக்கு புறம்பானது.எந்த ஒரு காரணத்திற்காக, ஒருவர் மீது தாக்குதல்
நடத்தினாலும் அல்லது எந்த ஒரு இயக்கத்தின் பாதுகாப்பிற்கு பங்கம்
ஏற்படுத்தினாலும், அல்லது மத நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவித்தாலும் அது
குறித்து, சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், இந்த
நடவடிக்கைகள் தொடரும்.இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Comments