டெல்லி: டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து வருவதால்
இரண்டே இரண்டு துறைகள் மட்டும் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளன.
1. ஏற்றுமதியாளர்கள்
2. சுற்றுலாத்துறை
காரணம், ஏற்றுமதியாளர்களுக்கு அவர்களது ஏற்றுமதிப் பொருளுக்கான விலை கடந்த
இரண்டு மாதங்களுக்கு முன் இருந்ததை விட சுமார் 20 சதவீதம்
அதிகமாகிவிட்டது. அதாவது, ஒரு பொருளை 2 மாதங்களுக்கு முன் ரூ. 50க்கு
ஏற்றுமதி செய்தவர்களுக்கு இன்று அதே பொருளுக்கு ரூ. 62 விலை கிடைக்க
ஆரம்பித்துள்ளது.
சுற்றுலாத்துறையினரின் மகிழ்ச்சிக்குக் காரணம்:
சுற்றுலாத்துறையினரின் மகிழ்ச்சிக்குக் காரணம், ரூபாயின் மதிப்பு
சரிந்துள்ளதால் இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின்
எண்ணிக்கை கணிசமாக உயர ஆரம்பித்துள்ளது.
எகிப்து, துருக்கிக்கு நோ:
வழக்கமாக எகிப்து, துருக்கி மாதிரியான நாடுகளுக்குச் செல்வோர் கூட அங்கு
நிலவும் அரசியல் பிரச்சனைகள், உள்நாட்டு போர்- மோதல்களால் தெற்காசியா
பக்கம் பார்வையைத் திருப்ப ஆரம்பித்துள்ளனர்.
ரஷ்யா, உக்ரைன், போலந்து, ஹங்கேரி..
கடந்த ஆண்டு ஜூன்-ஜூலை மாதத்தோடு ஒப்பிடுகையில் இப்போது இந்தியாவுக்கு
வருவோரின் எண்ணிக்கை சடாரென 15 சதவீதம் அதிகரித்துவிட்டது. குறிப்பாக
ரஷ்யா, உக்ரைன், போலந்து, ஹங்கேரி உள்ளிட்ட கிழக்கு ஐரோப்பிய நாடுகளில்
இருந்து இந்தியாவுக்கு வரும் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
Comments