லக்னோ : உ.பி.,மாநிலத்தில் கல்லூரி மாணவி கற்பழிக்கப்படவில்லை என்றும்,
அவர் பெற்றோர்கள் கண்டித்ததால் தாமே தீ வைத்து தற்கொலை செய்து
கொண்டதாகவும் அகிலேஷ் யாதவ் போலீசார் பூசி மெழுகி வழக்கை நீர்த்து போக
செய்து விட்டனரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
முலாயம் சிங்கின் மாவட்டம் :
முலாயம்
சிங்கின் சொந்த மாவட்டத்தில் நடந்த இந்த சம்பவம் அனைத்து செய்தி
தாள்களிலும் பரபரப்பாக பிரசுரமானது.
கல்லூரி மாணவி எரித்து கொலை என்று
கூறப்பட்டது. ஆனால் இது கொலையுமல்ல, கற்பழிப்புமல்ல என்று மாநில அரசுக்கு
விசுவாசமாக மாநில ஏ.டி.ஜி.பி., அருண்குமார் ஒரு பேட்டியை கொடுத்துள்ளார்.
இவரது பேட்டி மூலம் இந்த கற்பழிப்பு சம்பவம் புஷ் என பைலை மூடும் நிலைக்கு
தள்ளப்பட்டது.
இவர் இது குறித்து அளித்த பேட்டியில்:
மாணவி, ஏற்கனவே பழகிய நபர் அழைத்ததன் பேரில் அவர் போய்இருக்கிறார். இங்கு
அவர் ஜாலியாக இருந்துள்ளார். இந்த உறவு குறித்து குடும்பத்தினர்
கண்டித்துள்ளனர். மேலும் ஒருவனை கல்யாணம் செய்து கொள்ள விருப்பம்
தெரிவித்துள்ளார். ஆனால் வரதட்சணை கேட்டுள்ளனர். இதற்கு பெண் வீட்டில்
மறுத்து விட்டனர். இதனையடுத்து அவர் தனக்கு தானே தீ வைத்து கொண்டார், இதன்
மூலம் அவர் கற்பழிக்ககப்படவில்லை என்றும், கொலை செய்யும் நோக்கம் இல்லை
என்றும் தெரிய வருகிறது. மேலும் குடும்ப பகை காரணமாக இந்த புகார்
தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும் வழக்கு பதியப்பட்டு விசாரிக்கப்படுகிறது.
இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. கொலை மற்றும் கற்பழிப்பு எல்லா
மாநிலத்திலேயும் தான் நடக்கிறது என்றார் கேசுவலாக.,
எதிர்கட்சியினர் குற்றம் :
இந்த மாநிலத்தில் சமீப காலமாக சட்டம் ஒழுங்கு கெட்டு வருவதாக எதிர்கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர். மேலும் கொலை சம்பவம் அடிக்கடி நடப்பதாகவும், அகிலேஷ் அரசு செயல் இழந்து விட்டது என்று குறை கூறி வந்த நேரத்தில் மாணவி கற்பழிப்பு சம்பவம் பெரிதாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் போலீசார் தங்களின் விசாரணையில் வழக்கின் அம்சத்திற்கு எதிராக மாற்றி முடிவு தந்து விட்டனர். இது மாநில அரசை காப்பாற்றும் முயற்சியாக இருக்கும் என எதிர்கட்சியினர் கூறியுள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் கற்பழித்த விஷயத்தை வெளியே சொல்லக்கூடாது என ஒரு பெண்ணின் நாக்கை அறுத்த சம்பவம் நடந்தது குறிப்பிடதக்கது.
Comments