
டெல்லி: பீகார் மாநில முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் மீதான மாட்டுத்
தீவன வழக்கை ஜார்க்கண்ட் நீதிமன்றம் விசாரிக்க உச்சநீதிமன்றம் இடைக்கால தடை
விதித்துள்ளது.
லாலு பிரசாத்துக்கு எதிரான மாட்டுத் தீவன ஊழல் வழக்கை ஜார்க்கண்ட் மாநில
நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் விரைவில் தீர்ப்பு
வழங்கப்பட இருக்கிறது.
ஆனால் தமது வழக்கை விசாரிக்கும் நீதிபதி, பீகார் மாநில முதல்வர்
நிதிஷ்குமாருக்கு உறவினர்
என்பதால் தமக்கு நீதி கிடைக்காது என்று லாலு
உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். மேலும் இந்த வழக்கை வேறு
நீதிமன்றத்துக்கு மாற்றவும் அவர் கோரியிருந்தார்.
லாலுவின் இம்மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி. சதாசிவம், சேலமேஸ்வரர்
ஆகியோர் கொண்ட பெஞ்ச் இன்று விசாரித்து ஜார்க்கண்ட் நீதிமன்றத்தில் இந்த
வழக்கு விசாரணை நடக்க தடை விதித்தது.
Comments