புத்தகயா தாக்குதல் கோழைத்தனமானது: நரேந்திர மோடி சாடல்

புத்தகயா தாக்குதல் கோழைத்தனமானது: நரேந்திர மோடி சாடல்அகமதாபாத்: புத்தகயா தாக்குதலுக்கு குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் இது கோழைத்தனமான தாக்குதல் என்று தெரிவித்துள்ளார். பீகார் மாநிலம் புத்தகயா மாவட்டத்தில் உள்ள மகாபோதி கோவிலில் இன்று காலை தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்தன. இதில் குறைந்தது 2 புத்த பிக்குகள் காயம் அடைந்துள்ளனர் என்று கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் கோவிலுக்கோ, அல்லது புத்தருக்கு ஞானம் பிறந்த போதி மரத்திற்கோ எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்நிலையில் இந்த தாக்குதல் குறித்து குஜராத் முதல்வர் நரேந்திர மோடி ட்விட்டரில் கூறியிருப்பதாவது, மகாபோதி கோவில் மீதான தாக்குதல் கோழைத்தனமானது. இது இந்திய மக்கள் மற்றும் உலகம் முழுவதும் உள்ள புத்த மதத்தினரை வேதனை அடையச் செய்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.

Comments