
‘டைம்ஸ் நவ் மற்றும் சி வோட்டர்
ஒப்பினியன் போல்’ என்ற நிறுவனங்கள் இணைந்து இந்த கருத்துக்கணிப்பை
எடுத்துள்ளது. இந்த முடிவின்படி வெளியான விவரங்கள் வருமாறு: வரவிருக்கும்
தேர்தலில் முக்கிய தேசிய கட்சியான காங்கிரஸ் , பா.ஜ., என இந்த இரண்டும்
பெரும்பான்மை கிடைக்காது. மொத்தம் 543 சீட்களில் இந்த கட்சிகள் 4 ல் ஒரு
பங்கை தான் பெற முடியும் நிலையில் உள்ளது. அதாவது பா.ஜ., மட்டும் 13 1
சீட்டுக்களையும் இந்த கூட்டணி மொத்தம் 156 தொகுதிகளையும் கைப்பற்றும்
என்றும், காங்கிரஸ் மட்டும் தனித்து 119 சீட்டுக்களையும், இந்த கூட்டணி
மொத்தம் 136 சீட்டுக்களையும் கைப்பற்றும். இது யாருக்கும் ஆட்சி அமைக்கும்
மெஜாரிட்டி கிடையாது. ஆட்சி அமைக்க 272 சீட்டுக்கள் வேண்டும்.
கடந்த
2009 தேர்தலில் காங்., கட்சி 206 எம்.பி.,க்களை வென்றது. பா.ஜ., கடந்த
முறை 116 எம்.பி.,க்களை வென்றது. இந்த முறை பா.ஜ.,வுக்கு அதிக இடம்
கிடைக்கும் என்றும் தெரிய வந்துள்ளது.
3 வது - 4 வது அணி :
பிரதமராக
வேண்டும் என்பதில் மோடிக்கே ( 38 க்கும் மேல் சதம் ) அதிக சத மக்கள்
வாக்களித்துள்ளனர், ராகுலுக்கு (18 சதம் ) மட்டுமே ஆதரவு உள்ளது.
மன்மோகன்சிங் பிரதமராக ( 6 சதம் ) சோனியா ( 3 சதம் ) மக்கள் ஆதரவு
அளித்துள்ளனர்.
சமாஜ்வாடி
( முலாயம்சிங்), ராஷ்ட்டிரியஜனதா தளம் ( லாலு ), தெலுங்கு தேசம் கட்சி (
சந்திரபாபு நாயுடு ) , இடதுசாரிகள் , பிஜூஜனதா தளம் மற்றும் சில உதிரி
கட்சிகள் சேர்ந்து 3 வது அணி அமைக்கும் பட்சத்தில் இந்த கூட்டணியினர்
மொத்தம் 129 சீட்டுக்கள் பெற முடியும். 4 வது அணியில் நிற்கும்
பகுஜன்சமாஜ்கட்சி ( மாயாவதி) , அ,தி.மு.க., ( ஜெ., ), திரிணாமுல் காங்., (
மம்தா ) ஆகியன மற்றும் சில உதிரி கட்சிகள் இணைந்து 122 சீட்டுக்களை
கைப்பற்றும். ஆக இந்த தேர்தலில் 4 முனைகளாக ஓட்டுக்கள் பிரிந்து நிற்கும்.
சமாஜ்வாடி, பகுஜன்சமாஜ், இடதுசாரிகள். அ.தி.மு.க., திரிணாமுல்காங்.,
கட்சிகள் 22 முதல் 33 சீட்டுக்கள் வரை பெறமுடியும். இந்தக்கட்சிகளே
மத்தியில் யார் ஆட்சி அமைப்பது என்பதில் முடிவு செய்யும் கட்சியாக
இருக்கும்.
தி.மு.க., இழக்கிறது :
பா.ஜ.,வுக்கு அதிக வெற்றியை தரும் மாநிலமாக மோடி ஆளும் குஜராத் அமையும் என தெரிகிறது. இங்கு மொத்தம் 26 சீட்டுக்களில் 21 சீட்டுக்கள் வெற்றி பெறும், காங்., கட்சி 5 சீட்டுக்களையே பெறும். தமிழகத்தில் தி.மு.க., கைவசம் வைத்துள்ள 18 எம்.பி.,க்களில் 5 சீட்டுக்கள் கைப்பற்றுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. தே.மு.தி.க., 2 சீட்டுக்கள் பெறும்.
அ.தி.மு.க., 29 சீட்டுக்கள் கைப்பற்றும். இதனால் வரும் தேர்தல் முடிந்து ஆட்சி அமைப்பதில் பெரும் மாநிலமான உ .பி.,யில் மொத்தம் 80 சீட்களில் அதிகம் பெறப்போகும் , முலாயம்சிங்கும், அ,தி.மு.,கவும் தான் முக்கிய பங்காக இருக்கும் என இந்த கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆந்திராவில் காங்., மண்ணைக்கவு்வும், ஆந்திர மாநிலத்தில் ஜெகன்மோகன் ரெட்டி துவக்கியுள்ளள கட்சிக்கு பெரும்பான்மை வெற்றி கிடைக்கும் என்றும் , இங்கு காங்., பெரும் தோல்வியை தழுவும் என்றும் தெரிய வந்துள்ளது. இங்குள்ள 43 சீட்டுக்களில் கடந்த முறை காங்., 36 சீட்டுக்களை வென்றது. இந்த முறை ஜெகன் மோகன் கட்சி 14 இடங்களையும், தெலுங்கானா ராஷ்ட்டிரி சமிதி கட்சி 11 சீட்டுக்களும், சந்திரபாபு நாயுடு கட்சி 7 சீட்டு்ககளையும் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மோடி பிரதமராக ஆசை :
Comments