சென்னை: இலங்கை 13-வது சட்ட திருத்தம் தொடர்பாக இன்று டெசோ கூட்டம்
நடந்தது. இதில் தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமை தாங்கினார். இதில்
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு, 1987-ம் ஆண்டு இந்தியா -இலங்கை
ஒப்பந்தத்தை நிறைவேற்ற வேண்டும். இந்த ஒப்பந்தத்தை எவ்வித திருத்தமுமின்றி
நிறைவேற்ற வேண்டும். தமிழக மீனவர்கள்
பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண
நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கையில் நடக்க உள்ள காமன்வெல்த் மாநாட்டில்
இந்தியா கலந்து கொள்ள கூடாது. மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும்
அக்.8-ம் தேதி டெசோ சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்
நடத்தப்படும். இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
Comments