பெய்ஜிங்: சீனாவில் பெருகி வரும் தாய்ப்பால் விற்பனைக்கு
பொதுமக்களிடையே எதிர்ப்பு வலுப்பெற்று வருகிறது. இணையத்தில் இது பெண்மையை,
தாய்மையை மதிக்காத மனிதத்தன்மையற்ற செயல் என கண்டக் குரலை எழுப்பி
வருகின்றனர்.
ஆரம்பத்தில் தாய்ப்பால் மூலம் அலங்காரப் பொருட்கள் மற்றும் சில
ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன. பின்னர் அடுத்தக்கட்டமாக தாய்ப்பாலின்
மூலம் சிலர் பானங்கள் தயாரிப்பதாக அதிர்ச்சித் தகவல் வெளியிட்டனர்.
இப்போது, அதன் அடுத்தக் கட்டமாக ஆரோக்கியமானது மற்றும் ஊட்டமளிக்கக்
கூடியது எனக் கூறி சீனாவில் சில பண முதலைகள் தாய்ப்பாலை விலை கொடுத்து
வாங்கி வருவதாக வெளியான செய்திகளால், பொதுமக்கள் ஆத்திரத்தில் உள்ளனர்.
சீனாவில் உள்ள சின்சின்யூ என்ற தரகு நிறுவனம் பணத்திற்காக பல இளம்
தாய்மார்களை இந்தத் தொழிலில் ஈடுபடுத்தி வருவது விசாரணையில் தெரிய
வந்துள்ளதால், அந்நிறுவனத்திற்கு ஷென்சுன் நகர நிர்வாகம் விற்பனை
உரிமத்தைத் தடை விதித்துள்ளது. ஆயினும், இதுபோல் பதிவு பெறாத எத்தனையோ
நிறுவனங்கள் வெளியில் தெரியாமல் இதனைத் தொடரக்கூடும் என்று பொதுமக்கள்
கருதுகின்றனர்.
Comments