ரயிலுடன் வந்த "தலையால்' பரபரப்பு

கோவை:ரயிலின் முன் பகுதியில், தொங்கியபடி மனித தலை வந்ததால், பரபரப்பு ஏற்பட்டது.கோவை ரயில் நிலையத்துக்கு, காலை, 9:10 மணிக்கு, ஐதராபாத்தில் இருந்து, திருவனந்தபுரம் வரை செல்லும், சபரி எக்ஸ்பிரஸ் ரயில் வந்தது. ரயில் நிலைய நடைமேடையில், காத்திருந்த பயணிகள், ரயிலின் முன்பகுதியில், ஒரு மனித தலை தொங்கிக் கொண்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பெண்கள் கூக்குரலிட்டனர்.ரயில்வே
ரோந்து போலீசார், தொங்கிக் கொண்டிருந்த மனித தலையைக் கைப்பற்றினர். தலைக்கு சொந்தமான உடலைக் கண்டறிய, ரயில் வந்த பாதையில், அனைத்து ஸ்டேஷன்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.சூலூர், முத்துக்கவுண்டன்புதூர் ரயில்வே கேட் அருகே, தலையில்லாமல் ஒரு உடல் சிதைந்த நிலையில் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார், கோவை அரசு மருத்துவமனைக்கு, அதை அனுப்பி வைத்தனர்.ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்தவருக்கு, 35 வயது இருக்கும். ரயில் தண்டவாளத்தில் படுத்து தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என, போலீசார் விசாரிக்கின்றனர்.

Comments