
சென்னை: இளவரசன் மனைவி திவ்யாவையும் அவர் தாயாரையும் தர்மபுரி மாவட்ட
எஸ்பி அஸ்ரா கார்கிடம் ஒப்படைத்துவிட்டதாக பாமகவினர் அறிவித்துள்ள
நிலையில், இதனை எஸ்பி மறுத்துள்ளார்.
காதல் திருமணம் செய்து கொண்ட இளவரசனிடம் இருந்து அண்மையில் பிரிந்து
சென்றார் திவ்யா. "இனி ஒருபோதும் இளவசரனுடன் சேரமாட்டேன்," என்று அவரை கூற
வைத்து,
இளவரசன் மர்மமான முறையில் மரணிக்க காரணமாக இருந்தன சில சமூக விரோத
சக்திகள்.
திவ்யா இப்படி சொன்ன அடித்த நாளே காதல் கணவர் இளவரசனின் உடல் தர்மபுரி
அரசு கலைக்கல்லூரி பின்புறம் உள்ள ரயில்வே தண்டவாளத்தில்
கண்டெடுக்கப்பட்டது.
தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இளவரசனின் மரணம்,
தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. சிபிஐ விசாரணை கோரி பெற்றோர்,
உறவினர்கள் போராடி வருகின்றனர்.
இந்த நிலையில், திவ்யா, அவரது தாயாருக்கு பாதுகாப்பு அளிக்க மாவட்ட
காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் நேற்ற (5ஆம் தேதி)
உத்தரவிட்டிருந்தது.
இதனிடையே, திவ்யாவையும், அவரது தாயார் அம்சவேணியையும் பா.ம.க.வினர் மாவட்ட
காவல்துறை கண்காணிப்பாளர் அஸ்ரா கர்க்கிடம் இன்று (6ஆம் தேதி)
ஒப்படைத்துவிட்டதாகவும், இனி திவ்யாவை பாதுகாப்பது காவல்துறையின் கடமை
என்றும் கூறியுள்ளனர்.
எஸ்பி மறுப்பு
ஆனால், இதுகுறித்து எஸ்பியிடம் நான் தொடர்பு கொண்டு கேட்டபோது, தன்னிடம்
அவர்களை ஒப்படைக்கவில்லை என்றும், திவ்யாவை நான் பார்க்கவே இல்லை என செய்தி
வெளியிடுமாறும் எஸ்பி அஸ்ரா கர்க் கேட்டுக் கொண்டார்.
இது என்ன புதுக் குழப்பம்..?
Comments