உத்தரகண்டில் நிவாரண பொருட்களை திருடிய அரசு அதிகாரி சஸ்பெண்ட்

உத்தரகண்டில் நிவாரண பொருட்களை திருடிய அரசு அதிகாரி சஸ்பெண்ட்டேராடூன்: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட உத்தரகண்ட் மாநிலத்தில் நிவாரணப் பொருட்களை திருடிய அரசு அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். வெள்ளம், நிலச்சரிவால் சீர் குலைந்துள்ள உத்தரகண்ட் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் சிக்கித் தவிப்போருக்கு வழங்குவதற்காக அரசு கரூவூலத்தில் நிவாரணப் பொருட்கள் வைக்கப்பட்டிருந்தன. அந்த பொருட்களை கரூவூல அதிகாரி ஒருவர் திருடி தனது கார் மூலம் வீட்டுக்கு எடுத்துச் சென்றது அங்குள்ள கேமராவில் பதிவாகி இருந்தது.

இது குறித்து அளிக்கப்பட்ட புகாரை அடுத்து அவரது வீட்டில் அதிரடி சோதனை நடத்தி நிவாரணப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து அந்த அதிகாரியை உத்தரகண்ட் அரசு உடனடியாக சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது. நிவாரண பொருட்களை அரசு அதிகாரி ஒருவர் திருடி சிக்கியுள்ளது பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

Comments