புதுடில்லி: காவிரி நதிநீர் பங்கீடு விவகாரம் தொடர்பாக இன்று காவிரி
மேற்பார்வையாளர்கள் குழுக்கூட்டம் டில்லியில் நடந்தது. இதில் ஜூலை, ஆகஸ்ட்
மாதத்திற்கான தண்ணீரை திறந்துவிடுமாறு தமிழகம் சார்பில் கோரிக்கை
விடப்பட்டிருந்தது. இதற்கு கர்நாடகா
சார்பில் வெளியிடப்பட்டுள்ள
அறிவிப்பில், பருவமழை சரியாக பெய்யும் பட்சத்தில், ஆகஸ்ட் மாதத்திற்கான
50 டி.எம்.சி. தண்ணீர் திறக்கப்படும். ஏற்கனவே ஜூலை மாதத்திற்கான 34
டி.எம்.சி. தண்ணீரில், 24 டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
தற்போது எஞ்சிய 10 டி.எம்.சி. தண்ணீர் வரும் ஜூலை இறுதிக்குள்
திறக்கப்படும். இவ்வாறு அந்த அறிவிப்பில் கர்நாடகா கூறியுள்ளது.
Comments