கல்வி அவசியம்:தற்போது உடல் நலம் தேறியுள்ள மலாலா, நியூயார்க்கில் உள்ள ஐ.நா., சபையில், நேற்று உரையாற்றினார். அப்போது, மலாலா பேசியதாவது: என் உடல் நலம் தேறுவதற்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி. தலிபான்கள் என்னை சுட்டதன் மூலம், நான் அமைதியாகி விடுவேன் என, நினைத்தனர். என்னை துளைத்த அவர்களின் குண்டு, பல ஆயிரம் குரல்களாக உருவெடுத்துள்ளது. தைரியமும், வலிமையும் உயிர்த்தெழுந்துள்ளன. தலிபான்களுக்கு எதிராக நான் இங்கு பேச வரவில்லை. ஒவ்வொரு குழந்தைக்கும் கல்வி அவசியம் என்பதை வலியுறுத்தவே இங்கு வந்துள்ளேன்.
பேனா முனை:தலிபான்களின் குழந்தைகளுக்கும் கல்வி அவசியம். இதையெல்லாம் முகமது நபி, ஏசுநாதர், புத்தர், மகாத்மா காந்தி ஆகியோரது போதனைகளின் மூலம் உணர்ந்துள்ளேன். கூர்மையான வாளைவிட, பேனா முனை சக்தி வாய்ந்தது என்பது உண்மை தான். எனவே தான், பயங்கரவாதிகள் கல்வியை கண்டு பயப்படுகின்றனர். பெண்களின் சம உரிமையை கண்டு அவர்கள் அஞ்சுகின்றனர். இவ்வாறு, மலாலா பேசினார்.
Comments